உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வயல் வே. குமாரசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:10, 29 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கல்வயல் வே. குமாரசாமி (சனவரி 1, 1944 - திசம்பர் 10, 2016) ஈழத்துக் கவிஞர், கல்வியாளர். சிறுவர் பாடல்கள், கவிதைகள் படைத்துள்ளார்.[1] தமிழிலக்கியப் பரப்பில் சிறந்த புலமை கொண்டவர். இவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பாலகுமாரன், நந்தா, வாகடனன் போன்ற புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இலங்கையின் வட மாகாணத்தில் சாவகச்சேரியில் கல்வயல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சங்கத்தானையில் வாழ்ந்து வந்தவர். அஞ்சல் அதிபராகப் பணியாற்றினார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராக சில காலம் தமிழ் போதித்தார்.

இவர் சிறு வயதில் இருந்தே கவிதை புனையும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். மரபு மற்றும் புதுக்கவிதையில் ஆளுமை பெற்றவராகவும் குழந்தைப் பாடல்களை எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார்.

விருதுகள்

[தொகு]
  • இந்து சமயப் பேரவையின் கவிமாமணி விரந்து (2000)
  • கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருது (2009)
  • மகரந்தச்சிறகு விருது (2011)
  • உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டு விருது (2012)
  • தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் கலைச்சாகரம் விருது (2014)
  • வட மாகாண சபையின் கௌரவ முதலமைச்சர் விருது (2015)
  • கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் காவ்யபிமானி விருது (2016)

வெளியான நூல்கள்

[தொகு]
  • சிரமம் குறைகிறது
  • மரண நனவுகள்
  • பாப்பாப்பா
  • பாடு பாப்பா
  • பாலர் பா
  • முறுகல் சொற்பதம்[1]
  • கல்வயல் வே.குமாரசுவாமி கவிதைகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 றஜீபன், கு. "யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள்!". எதுவரை?. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வயல்_வே._குமாரசுவாமி&oldid=3594874" இலிருந்து மீள்விக்கப்பட்டது