குஞ்ஞாலி மரைக்காயர்
குஞ்ஞாலி மரைக்காயர் என்பது கோழிக்கோட்டு சாமுத்ரி மன்னனின் கடற்படைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். நால்வர் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி வகித்திருந்தனர். பதினாறாம் நூற்றாண்டுகளில் இவர்கள் போர்த்துகீசியர்களுக்கு எதிராக 1502 இல் தொடங்கி 1600கள் வரை சாமரின் கடற்படைடயில் சிறப்பாக போர் புரிந்தனர். இவர்களில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் பிரபலமானவர், இந்தியக் கடற்கரையில் முதன் முறையாய்க் கடற்படைப் பாதுகாப்பு தளத்தை ஒருங்கிணைத்தவர்களாவர்.
பட்டம்
குஞ்சாலிகளுக்கான பட்டங்கள் சாமரின் மன்னர்களால் வழங்கப்பட்டன. மரக்கலம் என்ற வார்த்தையை தழுவி மரைக்காயர் என அழைக்கப்பட்டனர்
கீழே குஞ்ஞாலி மரைக்காயர்கள் பதவி வகித்த காலமும் அவர்களின் இயற்பெயரும் தரப்பட்டுள்ளது.
வரிசை | இயற்பெயர் | பதவிக்காலம் |
---|---|---|
முதலாம் குஞ்ஞாலி | குட்டி அஹம்மத் அலி | 1520-1531 |
இரண்டாம் குஞ்ஞாலி | குஞ்ஞாலி மரைக்காயர் | 1531-1571 |
மூன்றாம் குஞ்ஞாலி | பட்டு குஞ்ஞாலி | 1531-1571 |
நான்காம் குஞ்ஞாலி | முஹம்மது அலி | 1595-1600 |
அரபு முசுலீம்கள் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த மலையாளக் கடலில் போர்ச்சுக்கீசியர் வணிகஞ் செய்ய வந்தனர். இது அரபு முசுலீம்களுக்குப் பிடிக்கவில்லை. முதலில் கொச்சி மன்னனும் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தான். நாலாம் குஞ்ஞாலி போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் குஞ்ஞாலி அரசைக் கைப்பற்ற முயற்சிப்பதாக மன்னனிடம் கூறி மன்னனோடு இணைந்து நான்காம் குஞ்ஞாலியைத் தோற்கடித்தனர்.