உள்ளடக்கத்துக்குச் செல்

கள்ளர் (இனக் குழுமம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். இப்பொழுது இக்குழுவினரில் புதுக்கோட்டை சமஸ்தானம் தொன்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

வரலாறு

கள்ளர் இனம் என்பது தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் அதிகமாகவும், பிற மாவட்டங்களில் சற்று குறைவாகவும் இருக்கும் ஒரு பெருங்குடி சமுதாயமாகும். சோழர்கள், பல்லவர்கள், வேளிர்கள், புதுக்கோட்டை சமஸ்தானம் தொன்டைமான் மன்னர்கள் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்களே.[சான்று தேவை] பல்லவ மன்னர்களின் வம்சாவழியே இன்றைய புதுக்கோட்டை தொன்டைமான் மன்னர்கள். இப்போது தமிழகத்தில் இருக்கும் ஒரே ஒரு மன்னர் குடும்பம் இவர்கள் மட்டுமே . இவர்கள் இந்தியாவை ஆண்ட சோழர்களுடன் உறவு கொண்டிருந்தனர் எனபதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. சுமார் 1500 பட்டப் பெயர்களை இந்த மக்கள் கொண்டுள்ளனர். இவர்களை பொதுவாக கள்ளர் என்று அழைப்பார்கள். ஆங்கில ஆட்சி இந்தியாவிற்குள் வந்தவுடன் இவர்களின் செல்வாக்கு படிப்படியாக குறைய துவங்கி தற்போது மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளனர்.

மக்கள்தொகை

தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரிïர் கள்ளர், செம்பநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.[1]

பெயர்க்காரணம்

கள்ளர் என்பவர் கள் என்றழைக்கப்பட்ட கொம்புத்தேனை பிரித்தெடுத்து தேன் விற்பனை செய்பவர்களென சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்

  • கிளைவழிக்கள்ளர்
  • அம்புநாட்டுக்கள்ளர்
  • ஈசநாட்டு கள்ளர்
  • செங்களநாட்டுக்கள்ளர்
  • மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர்
  • ஏழுநாட்டுக்கள்ளர்
  • நாலுநாட்டுக்கள்ளர்
  • பிரம்பூர்நாட்டுக்கள்ளர்
  • மாகாணக்கள்ளர்
  • பிரமலை கள்ளர்
  • மேல்ராயன் கோட்டை கள்ளர்


கள்ளர் குலப் பட்டங்கள்

சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக ��றியமுடிகிறது. சோழர் சாம்ராஜ்யத்தில் ஈச நாட்டுக் கள்ளர்கள் வகித்து வந்த பதவிகள் மற்றும் போர்களில் அவர்கள் செயலபட்ட விதத்தைக் கொண்டு அவர்களைச் சிறப்பு பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கிறார்கள். உதராணமாக தொண்டைமான், பல்லவராயர், வில்லவராயர், களத்தில் வென்றார், நாட்டாள்வார், வாண்டையார், காடவராயர் என்பவை கள்ளர் குலத்தில் உள்ள சில பட்டப் பெயர்கள் ஆகும். அமரர் கல்கி தனது பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில் இத்தகைய பட்டப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்.

1. பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.  
2. பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.  
3. பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள். காலிங்கராயன், சேதிராயன், மழவராயன், நாடாள்வான் போன்றவை.  
4. பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். கற்றளிப்பிச்சன். தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.  
கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.  
அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை.  தமிழகத்தில் தஞ்சை கள்ளர் குலத்தின் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பர்மா ஆகிய நாடுகளிலும் இவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்ள இவர்கள் பயன் படுத்தும் பட்டப் பெயர்கள் பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக ஒரு சில பட்டப் பெயர்கள் வருமாறு. அரசாண்டார்,அம்பலக்காரர், ஆளியார், ஆலங்கொண்டார், இராங்கியர், இராசாப்பிரியர், கண்டியர், காலிங்கராயர்,கொடிக்கமுண்டார்,நாட்டார்,தொண்டைமான், வாண்டையார், கங்கைநாட்டார், மழவராயர்,முத்தரையர், கருப்பூண்டார், விசயதேவர், கொன்னமுண்டார், வல்லுண்டார்.

மேல் குறிப்பிட்ட பட்டப் பெயர்கள் யாவும் ஒரு காரணத்திற்காக சோழ மன்னர்களால் வழங்கப்படவை என்பதற்கு நிறைய சரித்திர ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக சோழ மன்னன் கலிங்கத்தை வென்ற தளபதிக்கு சூட்டிய பட்டமே காலிங்கராயர். இராசராசசோழன் தெலுங்க வெற்றியை தந்த தளபதிக்கு அளித்த பெயர் தெலிங்கராயர், இராசேந்திர சோழன் இலங்கையை வென்று முடியை கைப்பற்றியதால் முடிகொண்டார் என்ற நாமத்தை பெற்றான். ராஜேந்திரசோழன் கடக்கம் என்ற இடத்தை வெற்றி பெற்ற தளபதிக்கு கடக்கமும்கொண்டார் என்ற பட்டம் கொடுத்தார்.அது கடக்கமுண்டார், கொடிக்கமுண்டார் எனவாயிற்று. சோழர்கள் உலக வரலாற்றில் 433 ஆண்டுகள் ( கி. பி. 846 - கி.பி. 1279 வரை ) அரசாண்டவர்கள். இவர்களின் பெரும் வெற்றிக்கு கள்ளரின் பங்கு பெருமளவு உண்டு.[2]

கள்ளர் குலப் பட்டங்கள் பட்டியல்

  1. பாண்டியராயர்
  2. பல்லவதரையர்
  3. பல்லவராயர்
  4. சேதிராயர் (சோழனின் கிளைக்குடி)
  5. பழுவேட்டரையர்(சோழன் பெண் எடுத்த சேரன் குலம்)
  6. தஞ்சைராயர்
  7. பழையாற்றரையர்(பழையாரை சோழர்களின் தலைநகரம்)
  8. கொடும்பாளுர்ராயர் (மாமன்னன் ராஜராஜன் மனைவியின் குலம், ராஜேந்திர சோழன் தாய்)
  9. வல்லத்தரையர்
  10. முத்தரையர்
  11. கொல்லத்தரையர்
  12. கலிங்கராயர்
  13. கொங்குராயர்
  14. செம்பியதரையர்
  15. கேரளராயர்
  16. ஈழ்த்தரையர்
  17. கச்சியராயர்
  18. காடவராயர்
  19. கடாரத்தரையர்
  20. கச்சைராயர்
  21. கோழிராயர் (கூழி என்றால் கரிகாலன் தலைநகர் உறையூரை குறிக்கும்)
  22. கலிங்கராயதேவர்
  23. களப்பாளராயர்
  24. குறும்பராயர்
  25. சோழங்கதேவர்
  26. சோழகன்னகுச்சிராயர்
  27. காலிங்கராயர்
  28. செம்பியமுத்தரையர்
  29. சம்புராயர்
  30. சோழரையர்
  31. சேதுராயர்
  32. செம்பியரையர்
  33. சோழதரையர்
  34. சீனத்தரயைர்
  35. சோழதிரையர்
  36. சிங்களராயர்
  37. தஞ்சிராயர்
  38. செழியதரையர்
  39. சிந்துராபாண்டிராயர்யர்
  40. தேவராயர்
  41. தமிழுதரையர்
  42. தெலிங்கராயர்
  43. தென்னதிரையர்
  44. தென்னரையர்
  45. தென்னறையர்
  46. தென்னவராயர்
  47. பாண்டுராயர்
  48. மூவரையர்
  49. மூவேந்த்ரையர்
  50. மானமுத்தரையர்
  51. மீனவராயர்மலைராயர்
  52. மலையராயர்
  53. மழவராயர்
  54. முனைதரையர்
  55. மலையராயர்
  56. மலையரையர்
  57. வங்கத்தரையர்
  58. வங்கராயர்
  59. வடுகராயர்
  60. நாகராயர்
  61. வாணாதிராயர்
  62. வல்லவராயர்
  63. வில்லவதரையனார்
  64. வில்லவராயர்
  65. வெங்கிராயர்
  66. வாணரையர்
  67. வாண்டராயர்
  68. வண்டைராயர்
  69. வேங்கைராயர்
  70. வெங்கிராயர்
  71. அங்கராயர்
  72. ஆக்காட்டரையர்
  73. அன்கராயர்
  74. ஆற்காட்டரையர்
  75. அனகராயர்
  76. அங்கதராயர்
  77. ஆச்சராயர்
  78. ஆச்சாண்டார்
  79. உழுவாண்டார்
  80. அச்சிராயர்
  81. அச்சுதராயர்
  82. உமத்தரையர்
  83. அத்திராயர்
  84. அத்தியரையர்
  85. ஆலத்தரையர்
  86. அமராண்டார்
  87. அம்பராண்டார்
  88. ஆற்க்காடுராயர்
  89. அம்மையத்தரையர்
  90. இராதராயர்
  91. இராமலிங்கராயதேவர்
  92. இராலிங்கராயதேவர்
  93. ஓந்திரையர்
  94. ஓந்தரையர்
  95. ஓமாந்தரையர்
  96. ஓமாமரையர்
  97. இருப்பரையர்
  98. அண்ணவசல்ராயர
  99. கொங்கரையர்
  100. கொங்ககரையர்
  101. கொங்குதிரையர்
  102. கொடிராயர்
  103. காசிராயர்
  104. கொடிக்கிராயர்
  105. கொடிக்கவிராயர்
  106. கஞ்சராயர்
  107. கொடும்பராயர்,
  108. கொடும்பைராயர்
  109. கடம்பராயர்
  110. கொடும்புராயர்
  111. கடம்பைராயர்
  112. கொடும்மளுர்ராயர்
  113. கொடும்பிராயர்
  114. கொடும்பையரையர்
  115. கார்யோகராயர்
  116. கட்டராயர்
  117. கொழுந்தராயர்
  118. கொற்றப்பராயர்
  119. கொத்தப்பராயர்
  120. கொற்றரையர்
  121. கண்டராயர்
  122. கண்டவராயர்
  123. கோட்டரையர்
  124. கோட்டையரையர்
  125. கண்ணரையர்
  126. கரம்பராயர்
  127. கீழரையர்
  128. கைலாயராயர்
  129. கையராயர்
  130. கரும்பராயர்
  131. குச்சராயர்
  132. குச்சிராயர்
  133. குச்சியராயர்
  134. குமதராயர்
  135. கலிராயர்
  136. குருகுலராயர்
  137. குழந்தைராயர்
  138. கொழந்தைராயர்
  139. கொழந்தராயர்
  140. கொழுந்தைராயர்
  141. களப்பாள்ராயர்
  142. கனகராயர்
  143. கூத்தப்பராயர்
  144. கன்னகொண்டார்
  145. கொத்தப்பராயர்
  146. கன்னக்குச்சிராயர்
  147. கன்னராயர்
  148. கன்னிராயர்
  149. கேளராயர்
  150. சக்கரையர்
  151. சாக்கரையர்
  152. சக்கராயர்
  153. செம்பரையர்
  154. சக்காராயர்
  155. சங்கரராயர்
  156. சோழுதிரையர்
  157. சோதிரையர்
  158. செல்லரையர்
  159. செனவராயர்
  160. சன்னவராயர்
  161. சனகராயர்
  162. சன்னராயர்
  163. சென்னிராயர்
  164. சன்னவராயர்
  165. சாணரையர்
  166. சாத்தரையர்
  167. சாமுத்தரையர்
  168. சாமுத்திரையர்
  169. சேண்ராயர்
  170. செனவராயர்
  171. சிங்கராயர்
  172. சேந்தராயர்
  173. சிந்துராயர்
  174. சிறுநாட்டுராயர்
  175. சிறுராயர்
  176. சேறைராயர்
  177. சேற்றூரரையர்
  178. சுக்கிராயர்
  179. சுக்கிரபராயர்
  180. சுக்கிரியராயர்
  181. சுந்தரராயர்
  182. சொரப்பரையர்
  183. சோதிரையர்
  184. தேசுராயர்
  185. தனஞ்சராயர்
  186. திருக்காட்டுராயர்
  187. தம்பிராயர்
  188. தனராயர்
  189. தோப்பைராயர்
  190. தலைசைராயர்
  191. துண்டராயர்
  192. தனசைராயர்
  193. துண்டுராயர்
  194. துண்டீரராயர்
  195. தனிராயர்
  196. நண்டல்ராயர்
  197. நந்திராயர்
  198. நந்தியராயர்
  199. நாட்டரையர்
  200. நாட்டறையர்
  201. நரசிங்கராயர்
  202. நெடுந்தரையர்
  203. நன்னிராயர்
  204. நெல்லிராயர்
  205. பகட்டுராயர்
  206. பூழிராயர்
  207. பூவனையரையர்
  208. பங்களராயர்
  209. பாச்சிராயர்
  210. பேரரையர்,
  211. பேதரையர்
  212. பாண்டராயர்
  213. பஞ்சராயர்
  214. பஞ்சந்தரையர்
  215. பஞ்சநதரையர்
  216. பாப்பரையர்
  217. பொய்ந்தராயர்
  218. போய்ந்தராயர்
  219. போய்ந்தரராயர்
  220. பட்டுராயர்
  221. பொன்னவராயர்
  222. பாலைராயர்
  223. பால்ராயர்
  224. பிச்சராயர்
  225. பதுங்கராயர்
  226. பதுங்கரார்
  227. பிரமராயர்
  228. பிலியராயர்
  229. பயிற்றுராயர்
  230. பரங்கிலிராயர்
  231. பரங்கிராயர்
  232. பருதிராயர்
  233. புள்ளராயர்
  234. பிள்ளைராயர்
  235. போதரையர்
  236. பூராயர்
  237. பனைராயர்
  238. மாதராயர்
  239. மாதைராயர்
  240. மாதுராயர்
  241. மாத்துராயர்
  242. மங்கலராயர்
  243. மாதவராயர்
  244. மாந்தராயர்
  245. மாந்தையரையர்
  246. மாந்தரையர்
  247. மட்டைராயர்
  248. மேனாட்டரையர்
  249. மணிராயர்
  250. மண்டலராயர்
  251. மண்டராயர்
  252. மாவாளியார்
  253. மண்ணிராயர்
  254. மணிக்கராயர்
  255. மாளுவராயர்
  256. மானத்தரையர்
  257. மருங்கராயர்
  258. பருங்கைராயர்
  259. கைராயர்
  260. விக்கிரமத்தரையர்
  261. விசயராயர்
  262. வங்கனராயர்
  263. விசையராயர்
  264. வங்காரமுத்தரையர்
  265. விசராயர்
  266. விசுவராயர்
  267. வங்கானமுத்திரையர்
  268. விசுவரார்
  269. வஞ்சிராயர்
  270. வாஞ்சிராயர்
  271. விஞ்சிராயர்
  272. விஞ்சைராயர்
  273. வடுராயர்
  274. விசலராயர்
  275. வடுராயர்
  276. விசுவராயர்
  277. வல்லவரையர்
  278. விண்டுராயர்
  279. வீண்டுராயர்
  280. விருதுளார்
  281. விலாடத்தரையர்
  282. வில்லவதரையர்
  283. வில்வராயர்
  284. விழுப்பாதராயர்
  285. விற்பன்னராயர்
  286. வீணதரையர்
  287. வெட்டுவராயர்
  288. வணதரையர்
  289. வாணதிரையர்
  290. வாணாதரையர்
  291. வீணாதரையர்
  292. வீனைதிரையர்
  293. வெங்கிராயர்
  294. வாலிராயர்
  295. வேம்பராயர்
  296. வாளுவராயர்
  297. வேள்ராயர்
  298. வாள்ராயர்
  299. வைகராயர்
  300. வையராயர்
  301. வைராயர்
  302. வயிராயர்
  303. பிள்ளைராயர்
  304. கழுத்திரையர்
  305. செட்டரையர்
  306. தழிஞ்சிராயர்

மேற்கோளும் குறிப்புகளும்

  1. அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009, விகடன், தமிழ்கூடல், டட்ஸ் தமிழ், நக்கீரன்
  2. [1]

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளர்_(இனக்_குழுமம்)&oldid=1416097" இலிருந்து மீள்விக்கப்பட்டது