உள்ளடக்கத்துக்குச் செல்

எழுமலை

ஆள்கூறுகள்: 9°52′N 77°42′E / 9.87°N 77.7°E / 9.87; 77.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுமலை
எழுமலை
அமைவிடம்: எழுமலை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°52′N 77°42′E / 9.87°N 77.7°E / 9.87; 77.7
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
வட்டம் பேரையூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

15,746 (2011)

3,028/km2 (7,842/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.20 சதுர கிலோமீட்டர்கள் (2.01 sq mi)

208 மீட்டர்கள் (682 அடி)

இணையதளம் www.townpanchayat.in/elumalai

எழுமலை (ஆங்கிலம்:Elumalai) (எழில்மிகு எழுமலை ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் முதல்நிலை பேரூராட்சி ஆகும்.இது உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

நகரமைப்பு

[தொகு]
வாசிமலையான் எழுமலை வாசிமலையான் மலைகள்

இந்நகரமானது நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தெற்கே சதுரகிரி, மேற்கே மாவூத்து வேலப்பர் மலை, வடக்கே குதிரை கிரி என்கிற வாசிமலை மற்றும் கிழக்கே திடியன் மலை, இதன் வடக்கே உள்ள வாசி மலையில் கண்ணன் கோவில் உள்ளது. இங்கே தான் மதுரை மீனாட்சி அம்மன் பிறந்ததாகக் கூறப்படும் மீனாட்சி பண்ணை உள்ளது. தெற்கே உள்ள சதுரகிரியில் சுந்தரமகாலிங்கமும், சந்தன மகாலிங்கமும், மேற்கே உள்ள மலையில் மாவூற்று வேலப்பர் (முருகன்) கோவிலும் உள்ளது.

விழாக்கள்

[தொகு]

சித்திரை 01, மாவூற்று வேலப்பருக்கும், சித்தர பௌர்ணமி அழகர் வைகையாற்றில் எழுந்தருளல் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமியும், ஸ்ரீ திருவேங்கடநாத பெருமாள் சுவாமியும் எழுந்தருளல், வைகாசியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாக்கள், ஆடி அமாவாசை சுந்தர மகாலிங்கம், புரட்டாசி மாதம் வாசிமலையானுக்கு உகந்த மாதம், ஆதலால் இவ்வூரில் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. திருக்கார்த்திகை திருநாள் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில் திருவிழாவும், மார்கழி மாதம் அனைத்து கோவில்களிலும், பங்குனி மாதம் முழுவதும் ஸ்ரீ பொட்டல் காளியம்மன், ஸ்ரீ காச்சகாரியாம்மன் கோவில் திருவிழாக்களும் கொண்டாடப்படும்.இதன் சிறப்பாக சல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது ஸ்ரீசுந்தம்மாள் கோவில் திருவிழா வெகு சிறப்பாக இருக்கும்

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°52′N 77°42′E / 9.87°N 77.7°E / 9.87; 77.7 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 208 மீட்டர் (682 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,746 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 7,890 ஆண்கள், 7,856 பெண்கள் ஆவார்கள். எழுமலையில் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-க்கு சமமாக உள்ளது. எழுமலை மக்களின் சராசரி கல்வியறிவு 65.15% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74.67%, பெண்களின் கல்வியறிவு 55.60% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட குறைவானதே. எழுமலை மக்கள் தொகையில் 1,725 (10.96%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு அதிகமாக உள்ளது.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.77% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 2.58% கிருஸ்துவர்கள் 0.35% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். எழுமலை மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 4.98%, பழங்குடியினர் 0.00% ஆக உள்ளனர். எழுமலையில் 4,224 வீடுகள் உள்ளன.[6]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. எழுமலை பேரூராட்சி
  5. "Elumalai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  6. Elumalai Population Census 2011பார்த்த நாள்: டிசம்பர் 21, 2015

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுமலை&oldid=3594484" இலிருந்து மீள்விக்கப்பட்டது