உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஈழவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழம் எனப்பட்ட இலங்கையில் வாழ்ந்த மன்னர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்புண்டோ? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:14, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஈழம் என்ற கட்டுரையைப் பார்க்க. ஈழம் என்பது இலங்கையில் வாழ்ந்த மன்னர்களைக் குறிக்கப் பயன்படவில்லை. ��ேரளாவுக்கும் ஈழத்துக்கும் பண்டைத் தொடர்பு உண்டு என்று சில உணவு, பேச்சு, உறவு வழக்கங்களை முன்வைத்து வாதிடுகின்றார்கள். --Natkeeran (பேச்சு) 14:18, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஈழம் என்பது இலங்கையைக் குறிப்பதாகக் கூறினேன். என் வாக்கிய அமைப்பு தவறானதோ? இன்றும் கூட இலங்கைத் தமிழை எங்களில் பல பேர் மலையாளம் என்று கூட சொல்லுவோம். மேலும், எழுத்துப்பெயர்ப்பிலும் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுகின்றன. நீங்கள் கூறியது போல இது வாதிடல் மட்டுமா? சான்றுகள் ஏதும் இல்லையோ?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:54, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]
இது பற்றிய துல்லியமான ஆய்வுகள் பற்றி விரிவான பரிச்சியம் இல்லை. இலங்கையில் பண்டைய காலத்தில் இருந்தே தமிழர்கள் இருந்து வருகிறார்கள். அதே வேளை, தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு பல்வேறு காலங்களில் பல தென்னிந்திய மன்னர்களால் படையெடுப்புக்கள் நடைபெற்று உள்ளன. இவை பெரும்பாலும் சோழ, பாண்டிய படையெடுப்புக்களே. எனினும் இவை சேர அல்லது கேரள நிலப்பகுதிகளில் இருந்து படைவீரகளைக் கொண்டு இருக்கலாம். இவர்களில் சில தனைகள் (படைகள்) இலங்கையில் வெவ்வேறு இடங்களில் தங்கி இருக்கலாம். மலையாளம் தமிழில் இருந்து அண்மையில் பிரிந்த மொழி என்றே பல அறிஞர்கள் கருதுகின்றார்கள். எனவே இது மலையாளம் சமசுகிருதத்தின் பெருந் தாக்கத்து உட்பட முன்பு நிகழ்ந்து இருக்கலாம். இலங்கையின் சில பகுதிகளில் இருக்கும் தாய்வழி சொத்துப் பரிமாற்றம், புட்டு இடியப்பம் போன்ற உணவு வழக்கங்கள், பேச்சுத் தமிழில் வழங்கும் பழம் தமிழ்ச் சொற்கள் ஆகியவை சில சான்றுகள். ஆனால் மலையாள மொழி எவ்வாறு வேகமாக வேறுபட்டது என்று விளங்கவில்லை. அல்லது தங்கிய நபர்கள் இலங்கைத் தமிழர்களோடு இணைந்து இருக்கலாம். --Natkeeran (பேச்சு) 15:27, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]
இல்லத்துப் பிள்ளைமார் கட்டுரையிலுள்ள கேரள ஈழவர்கள், சில தொடர்புத் தகவல் போன்ற உள் தலைப்புகளிலுள்ள தகவல்களையும் படிக்கலாம். ஈழத்துக்கும், கேரளா, தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருக்கும் ஈழவர் சாதியினருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை அறியலாம். (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து வந்த ஈழவர்கள்தான் இல்லத்துப் பிள்ளைமார் என்கிற பெயருடன் தமிழகம் முழுவதும் பரவி இருக்கின்றனர். இவர்கள் முன்பு ஈழவர், பணிக்கர் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தனர். பின்னர்தான் (1947க்குப் பின்பு) இல்லத்துப் பிள்ளைமார் என்கிற பெயருக்கு மாற்றம் அடைந்திருக்கின்றனர்.) இருப்பினும் நற்கீரன் கூறுவது போல் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டால் உண்மைகள் கண்டறியப்படலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:27, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]

சங்க காலத்திலிருந்தே ஈழ மன்னர்கள் சேரருடன் நட்பாயிருந்துள்ளனர். இலங்கை வேந்தன் கயவாகு சேரன் செங்குட்டுவனின் முடிசூட்டு விழாவுக்கு வந்திருந்ததையும் அவர் தம் நட்பையும் சிலப்பதிகாரம் எடுத்தியம்புகிறது. இலங்கையருடன் கேரளத்தினர் திருமணத் தொடர்புகள் கொண்டிருப்பதும் நெடுங்காலமாக உள்ளதே. கேரளத்தினர் இலங்கையில் பெரிதும் ஈடுபாட்டுடன் இருப்பதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். இப்போதும் இலங்கையில் தொழில் புரியும் கேரளத்தினர் இலங்கைப் பண்பாட்டை நேசிப்போராக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 18:21, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈழவர்&oldid=1454744" இலிருந்து மீள்விக்கப்பட்டது