பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விருட்’டென் றந்தக் குதிரைக் குட்டி
பாய்ந்து ஓடவே,
விழுந்து விட்டார், ஜவஹர் அங்கே
தரையின் மீதிலே!
திரும்பிக் கூடப் பார்த்தி டாது
குதிரைக் குட்டியும்
சென்று ஜவஹர் வீடு தன்னைச்
சேர்ந்து விட்டது!

குதிரை மட்டும் திரும்பி வந்த
காட்சி கண்டதும்,
குழந்தை எங்கே?” என்று பெற்றோர்
திகைக்க லாயினர்.
பதறிக் கொண்டே தந்தை தாயும்
மற்றை யோர்களும்
பலதி சைக்கும் சென்று நன்கு
தேட லாயினர்,

தரையில் வீழ்ந்த ஜவஹர் லாலோ
எழுந்து உடைகளைத்
தட்டி விட்டுக் கொண்டு வீடு
நோக்கி வந்தனர்.
குறைகள் எதுவும் இன்றித் திரும்பி
வந்த குழந்தையைக்
கூட்ட மாகத் தேடி வந்தோர்
வழியில் கண்டனர்.



219