88 தாய்மை
எதையும் செய்ய வேண்டும் என வற்புறுத்துகின்றது. அவ்வாறு செய்வதால் மனிதனைப் பற்றியுள்ள யான்” எனது’ என்னும் செருக்கு அகலுவதோடு யாவும்: இறைவன் செயல் என்ற உணர்வும், பார்க்கும் பொருள் அனைத்தும் பரமன் வடிவமே என்ற எண்ணமும் அரும்பும். அவ்வாறு முடியாதவர்கள் பக்தி மார்க்கத்திலமைந்த வேறு நற்செயல்களைச் செய்யினும் இறையருளைப் பெறலாம் என்கிறார் கண்ணன். அவன் காட்டும் பக்தி இநறியில் முனைப்பு இல்லை; சுகதுக்கமில்லல, மானாபி மானமில்லை, ஆனால் பொறுமை உண்டு: தன்னடக்கம் உண்டு. தயை உண்டு: திட உணர்வு உண்டு. அவற்றால் பெறும் சாந்தியுண்டு. 63 நாயன்மார் வரலாறு இதற்குச் சான்றாகும். இவ்வாறு வடக் கி லும் தெற்கிலும் பாரதத்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி யுற்ற இந்த பக்தி நெறி இயக்கம் தனிப்பட்ட இயக்கமாகஇன்று நாடு முழுவதும் தழுவிய இயக்கமாக நின்றது.
இலக்கியச் சான்றுகளைத் தவிர்த்து, சிந்துவெளி: நாகரிகம் பற்றிய அகழ்வாய்வுகளிலும் அந்த நெடுங் காலத்துக்கு முன்பே சிவ வணக்கமும் அதற்குரிய பக்தி நெறியும் இடம் பெற்றிருந்தன எனக் காண்கின்றோம். இவற்றின் அடிப்படையில் கணக்கிடமுடியாத மனித இனத் தோற்றத்தை ஒட்டி, அவன் எண்ணத் தொடங்கிய நாள் ஒட்டி வளர்ந்த பக்தி நெறி சுமார் எழாயிரம் ஆண்டு களுக்கு முன்பே பல சமயங்களாகத் தோன்றும் நிலையினை உண்டாக்கக் காண்கின்றோம். எனவே ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன்பே இன்று தமிழ்நாட்டில் காணும் சைவ, வைணவ சமய நெறிகள் தோன்றி விட்டன என்பது உறுதி. காலந்தோறும் தொல்காப்பியத்தில் காணும் கந்தழியும் சேயோனும் மாயோனும் பகவத்கீதை தந்த கண்ணன் வழிபாடும் பல்வேறு வகையில் இந்திய நாட்டில் சிறந்தன
என்பது வரலாறு காட்டும் உண்மை. -