க. சமுத்திரம் 85 "அடி சண்டாளி. என் மகனையாடி ஏலாதவன்னு சொன்னே. நீ மதம் பிடிச்சுத் திறிஞ்சா அதுக்கு அவன் என்னடி பண்ணுவான்? இப்போ சொல்றதை நல்லாக் கேளுடி. ஒன் கண்ணு முன்னாலேயே, என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்துவச்சு, ஒரு வருஷத்துக்குள்ளே. என் பேரக் குழந்தையை நான் மடில வச்சுக் கொஞ்சலைன்னா என் பேரு சொர்ணம்மா இல்லடி அடிப்பாவி. என் பிள்ளையை எப்படிக் கேவலப்படுத்தியிருக்கா. ராத்திரிலே என்ன பாடெல்லாம் படுத்தினாளோ அடேய். இன்னுமாடா நீ, இவள்.கூட வாழனும். இவளை ஒரேயடியாய் மிதிச்சுப் போடாம இப்படி அடிபட்டு நிக்கியே. நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா..?" காந்தாமணி, அம்மாவின் வாயைப் பொத்தினாள். தாயின் ஆவேசம் தனயனுக்கும் வந்துவிட்டது. இப்போது பசுப்போல் மலங்க மலங்கப் பார்த்தபடியே நின்ற சங்கரியின் மீது மனோகர் பாய்ந்தான். அவள் முடியைப் பிடித்து இழுத்தான். கால்களை இடறி வயிற்றைக் குத்துவதற்காக குதிக ல்களைத் துக்கி கைகளை ஓங்கினான். என்றாலும், சங்கரி அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. தொப்பென்று கீழே விழுந்தாள். பின்பக்கமாய் விழுந்து மல்லாக்கச் சாய்ந்தாள். வாயில் நுரை சோப்புக் குமிழ்களாய் நின்று நிதானித்து, பின்னர் திரிந்துபோன பாலாய் ஓடியது. கண்கள் இடுக்கிக் கொண்டன. கை கால்கள் வெட்டிக் கொண்டன. வெட்டி வெட்டி ஒன்றை ஒன்று குத்திக் கொண்டன. £62 மனோகர் திருவான்மியூர் பேருந்து வளாகத்திற்கு எதிரே, மாமல்லபுர பேருந்து நிறுத்தத்தில், கால்களைச் சுழற்றாமலே, கண்களைச் சுழற்றினான். அவன் நின்ற இடத்தை பேருந்துக் கூடாரம் என்று சொல்ல முடியாது. அவனைப்போல் கூடாரம் அற்றுப்போன ஒரு இடம். பாதிக்கிழிந்துபோன பேருந்துப் படத்தைச் சுமக்கும் வளைந்துபோன கம்பி. மழை, சாலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. மண் திட்டுகள் சேறும் சகதியும் ஆன சதைகளாய் வழிந்தோடின. குண்டு குழிவாய்கள் நீரைக் கொப்பளித்தன. மூடியற்ற சாக்கடை குழிகளில், நீர் சுழி போட்டது. முந்தய மழையாலும் மண் லாரிகளாலும் ஏழைப் பெண்ணின் புடவைபோல் ஒப்புக்குப் போடப்பட்ட தார், நார் நாராய், தடம்
பக்கம்:ஒத்தை வீடு.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை