சு. சமுத்திரம் 61 அனுமானித்து, சும்மாவே இருந்து விட்டாள். பைக்கில் ஏறிய மனோகர், வீட்டை திரும்பிப் பார்த்தபோது, அம்மா பக்கத்தில் சங்கரி. முகத்தைக் கழுவியதுபோல் கூடத் தெரியவில்லை. முந்தானை விலகிய நினைப்பற்றவளாய் நின்றாள். அவனைப் போய் வழி மறித்திருப்பாள். மாமியார் ரகளைக்குப் பயந்து விட்டாள். அலுவலகத்தில், மனோகர் நினைவுகளை அசை போட்டான். மனைவியை அந்தக் கோலத்தில் பார்த்தது, என்னவோ போலிருந்ததது. அங்கும் இங்குமாய் நெளிந்தான். கால்தட்டிக் கீழே விழுந்த நாற்காலியை எடுப்பதற்காக எழுந்தவன், எதற்கு எழுந்தோம் என்ற நினைப்பில்லாமல் அந்த அறையைச் சுற்றினான். அல்லாடி. அல்லாடி சோபா செட்டில் சாய்ந்தான். கொஞ்சம் சுகமாக இருந்தது. அவளிடம் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. மெய்யான நியாயம். மெய் சம்பந்தப்பட்ட நியாயம். ஆனால், அந்த நியாயத்தை, அப்படி அநியாயமாக சொல்லியிருக்க வேண்டாம். அப்படியும் சொல்ல முடியாது. அவள் இதுவரை பொறுத்ததே பெரிசு நாய் தேங்காயை உருட்டியது போன்ற கதை. அரைக்கிணறு தாண்டி கீழே விழுந்து அடிபட்டுப்போன கதை "அய்யா. ஏதாவது." 'முப்பது வயதிலும் எழுபது வயது நடுக்கத்தோடு நின்ற சவுக்கிதார் மருதனை, மனோகர் கண் திறந்து பார்த்தான். துணை இயக்குநருக்கு உயிர் நடுக்கம் என்றால், அவனுக்கு உடல் நடுக்கம். இராக்காவலாளியான இவன், இரவு பத்து மணி முதல் நான்கு மணி வரை வீட்டில் படுக்கப் போய்விடுவான். டெலிபோனை எடுத்து, கீழே வைத்து விடுவான். ஒருவேளை அதற்கு முன்பே தன் வேலையைச் சரிபார்க்க நடுராத்திரியிலேயே டெலிபோன் செய்திருப்பாரோ. என்னை ஒழித்துக் கட்டுற வேலையைத்தான் முக்கியமான வேலை என்று சொல்லியிருப்பாரோ. பத்து வருஷ சர்வீஸ் பலன் கொடுக்குதான்னு பார்ப்போம்: 'அய்யா. நேத்து நைட்டு முழுதும் டெலிபோன் வேலை செய்யலைய்யா. அப்பப்போ வருது. அப்பப்போ போய்டுதுய்யா. கேபிள் பால்டாம்யா." மனோகர், அவனை, வினோதமாகப் பார்த்தான். அவன் நடுங்கி விட்டான். சஸ்பென்ட் சஸ்பென்டு தானோ. எதுக்கும் அடுத்த அஸ்திரத்தைப் போட்டுப் பாக்கலாம். "ராத்திரி முழுதும் எனக்குப் பேதி அய்யா. முக்கால் வாசி நேரம் பாத்ரூம்லதான் இருந்தேன் அய்யா "
பக்கம்:ஒத்தை வீடு.pdf/62
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை