60 ஒத்தை வீடு கேட்டுட்டேனே. எப்படியோ கேட்டுட்டேனே. புத்தியக் கடன் கொடுத்துட்டேனே. அவர் ஆம்பளையா இல்லாமல் இருக்கலாம். அதனாலேயே அவர் மனுஷன் இல்லேன்னு ஆயிடுமா. அந்த மனுஷனுக்குள்ள ஒரு மனம் இருக்குமே. அது இப்ப என்னபாடு படுதோ. நான் பெண்ணே இல்ல. பிறகு எப்படிப் பெண்டாட்டியா இருக்க முடியும்.' சங்கரி, அவனைப் பார்த்துப் பார்த்து கைகளை பிசைந்தாள். பிறகு, தலையில், ஒங்கி ஓங்கி அடித்தாள். மனோகரோ, அவளை ஏனென்று கேட்கவில்லை. தலையைத் தாக்கும் கரங்களைத் தடுக்கவில்லை. அழட்டும். செத்துப்போனவனுக்கு ஒப்பாரி வைக்கிறாள். தப்பில்லைதான். அவனுள் ஒரு வைராக்கியம். பட்டதுபோதும். இவள் ஒப்பாளிக்கு உருவம் கொடுப்பது போல் செத்துப் போகவேண்டும். ஆணாய் நடக்க முடியாதவன், பிணமாய்த்தான் போக வேண்டும். அதை எப்படிச் செய்வது. எங்கே செய்வது. எப்போது செய்வது. 7 மனோகர், துணை இயக்குநராய், அலுவலக சுழல் நாற்காலியில் சோர்ந்து போய்க் கிடந்தான். எதிர் நாற்காலிகளில் ஒன்றை மேஜைக்கு இழுத்துப் போட்டு கால்களை நீட்டி போட்டிருந்தான். தலைதட்டும் மெத்தையிட்ட நாற்காலியில் கரங்களை வளைத்துப் போட்டு, அரைக்கண் பார்வையில் கிடந்தான். துரக்கமும் துக்கமும் கலவையாகி அவனை மயக்கிப் போட்டன நினைவுகள் அவனைத் துக்கிப் போட்டு மிதித்தன. சங்கரி, கண் விழிக்கும் முன்பே எழுந்து முகத்தை மட்டும் கழுவிவிட்டு, ஐந்து மணிக்குப் புறப்பட்டு ஆறு மணிக்கு அலுவலகம் வந்துவிட்டான். பாயில் அப்போதுதான் துரக்கம் கலைத்த அம்மா, அவன் பக்கமாய் ஓடிவந்து, எங்கடா. எங்கடா.” என்றபோது, அவன் அவளுக்குப் பதிலளிப்பதுபோல் டெலிபோன் எண்களைச் சுழற்றினான். வேதமுத்தா. நான் ஆபீஸ் வாரேன். நிறைய வேலை இருக்குது. என் ரூமைக் கிளின் செய்து வை. அம்மாக்காரி, அவன் சடடை கிழியும்படி இழுத்திருப்பாள். ஆனால், ராமசாமிக்கு விலங்கு மாட்டுவதற்கு அவன் போவதாக
பக்கம்:ஒத்தை வீடு.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை