பக்கம்:ஒத்தை வீடு.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 215 சித்தப்பா, மனைவியை கையமர்த்திவிட்டு, செல்வாவை பார்த்து நடந்தார். இடையே குறுக் கிட்ட பிள்ளைகளின் முதுகுகளில் இரண்டு சாத்து சாத்திவிட்டு, அவர்களை மனைவியின் பக்கமாய் தள்ளிவிட்டார். ஆவேசமாய் பேசினார். "இந்த அளவுக்கு பேச வந்துட்டியாடா அண்ணன் பிள்ளைய வளர்க்கிறதைவிட, தென்னம் பிள்ளைய வளர்க்கலாம் என்கிறது சரியாப் போச்சு. ஆனாலும், உன் படிப்ப கெடுத்துட்டேன் என்கிற பழி பாவத்திற்கு நான் ஆளாக விரும்பல. இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்குது. எப்படியாவது காலேஜுக்குப் போ. அடுத்த வருஷம் நம்ம ஊர்ப்பக்கம் இருக்கிற டவுனுல உன்னை சேர்த்துடுறேன். நடந்தது நடந்ததாய் இருக்கட்டும். எம்மா. உன்னத்தாம்மா லட்சுமி. உன்னை கையெடுத்து கும்பிடுறன். ரெண்டே ரெண்டு மாசம் பொறுத்துக்கம்மா. ஒனக்கும் எனக்கும் ஊருக்குப் போகும் போதெல்லாம், தென்னை மரத்துல ஏறி, இளநீர் பறித்து கொடுத்த பிள்ளம்மா. அப்படிப்பட்ட இவன் இப்ப எப்படி இந்த நிலைமைக்கு ஆளானான்னு புரியல. டேய் செல்வா! நாளையிலிருந்து காலேஜ் போகணும்." "போமாட்டேன்." "ஏன் போகமாட்டே?” "போகப் பிடிக்கல." "சித்தப்பா சொல்றத கேளுடா. எதை இடையில விட்டாலும் படிப்பை விடக்கூடாது.டா..." "நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன். ஆனால் காலேஜுக்கு மட்டும் போகமாட்டேன்." "அப்போ நீ இந்த வீட்ல இருக்கிறதுல என்னடா அர்த்தம்?" செல்வா, அந்த அறைவாசல் இடைவெளியில், சித்தப்பா வையும், சித்தியையும் தன்னை அறியாமலே மோதித் தள்ளியபடி, கட்டிய லுங்கியோடு, போட்டிருந்த சட்டையோடு வாசல்வரை நடந்தான். வாசல் வரை நடந்தவன், வீதிக்கு வந்ததும், ஒட்டமும் நடையுமாகப் போனான். பின்னர் ஒரேயடியாய் ஒடுவதுபோல் ஒடினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/215&oldid=762277" இலிருந்து மீள்விக்கப்பட்டது