சு. சமுத்திரம் 147 துவைத்துப் போட்டிருக்கிறாள். செல்வா பாதி இட்லி வாயோடு, "டாக்டருக்கிட்ட போகலாமா சித்தி." என்றான் "உங்க சித்தப்பா, காலையிலே வருவாரு அவர் கூட்டிட்டுப் போவாரு. நீ குழந்தைகளை விட்டுட்டு காலேஜ"க்குப் போ.” எனக்கு ஆஸ்மா இருக்குமான்னு சந்தேகமா இருக்குது. மூச்சு வாங்குது.. , இன்னிக்கு ஒன் சித்தப்பாவ கூட்டிட்டுப் போகச் சொல்கிறேன்" என்றாள். இது கத்துவதால் ஏற்படுகிற இளைப்பு. ஆஸ்மா இல்லை என்று வாயெடுக்கப் போன செல்வா, அதற்கு முன்னெச்சரிக்கையாக அதே வாயை இட்லித் துண்டுகளால் அடைத்துக் கொண்டான். செல்வா, ஸ்கூட்டரில், சுபேதாவை முன்னால் நிறுத்திக் கொண்டும், அருணை பின்னால் இருத்திக் கொண்டும் புறப்பட்டான். ஆரம்ப காலத்தில் அப்படியே அதே வண்டியில் கல்லூரிக்குப் போவான். என்றைக்கு சித்தி "பெட்ரோல் என்ன கொட்டியா கிடக்குது.” என்று தன்பாட்டுக்குச் சொன்னாளே, அன்றையிலிருந்து குழந்தைகளை விட்டுவிட்டு, அந்த இரு சக்கர வாகனத்தை வீட்டில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, பேருந்து நிலையத்தைப் பார்த்து ஓடுவான். குறைந்தது ஐந்தாறு நிமிடம் தாமதமாகத்தான் முதல் வகுப்பிற்கே போக முடிகிறது. இதனால் மாணவர்கள் இவனுக்கு லேட்டன் என்று பெயர் வைத்தார்கள். டேலேட்ட்ா என்றுதான் இவனை செல்லமாகக் கூப்பிடுவார்கள். இவன் லேட்டாக வருவதால் இவனை மாணவ தாதாவாக நினைத்துக் கொண்டு ஆசிரியர்கள் எதுவுமே சொல்ல மாட்டார்கள். கல்லூரிக்குப் போன செல்வாவிற்கு, பாடத்தில் கவனம் போகவில்லை. பொதுவாக விரிவுரையாளர் சொல்லச் சொல்ல அப்படியே தானும் சொல்லி மனதுக்குள் பதிவு செய்துக் கொள்வான். ஆனால் இன்றோ, அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியவில்லை. முதல் மூன்று வகுப்புக்களிலும் கவிதை மயமானான். இடைவேளையில் எழுதிப் பார்த்தான். இயலவில்லை ஆனாலும், அதுவே ஒரு வைராக்கியமாகி விட்டது மாலை வகுப்புக்களை கட்டடித்துவிட்டு, கல்லூரி நூலகத்திற்குள் நுழைந்தான். நீண்ட மேஜையில் பல்வேறு இதழ்கள் துண்டு துண்டாக கிடந்தன. பெரிய இதழ்கள், சிற்றிதழ்கள், அறிவு ஜீவிகள் நடத்தும் தனிச்சுற்றுப் பத்திரிகைகள் என்று பல்வேறு வகை ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு வகையில் கவிதை இருந்தது இவனுக்கு தெம்பு கொடுத்தது. கூடவே கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று ஒரு பிரபல கவிஞர், லோக்கல் கவிஞர்களுக்கு
பக்கம்:ஒத்தை வீடு.pdf/147
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை