132 புதைமண் சீக்கிரமாய் என்னை அனுப்பினால் உங்களுக்கு கோடி புண்ணியம். சரி. கேளுங்கள்." குடிமகன்ான ஒரு தடிமகன், ஒரு கேள்வி கேட்டான். "ஒகே டாக்டர் ஒரல் செக்ஸ்ஸால் எய்ட்ஸ் வ்ருமா? "பொதுவாக வராது. ஆனால், வாயில் புண் இருந்தால், உறுப்பிலும் புண் இருந்தால் இந்த இருவரில் ஒருவர் எய்ட்ஸ் நோயாளியாக இருந்தால், இது வருவதற்கு வாய்ப்புண்டு." "இந்த ஒரல் செக்ஸ்ல, எய்ட்ஸ், வீடி, ஆபத்துக்கள் வராமல் இருக்க நாங்கள் என்ன செய்யணும்." "ஒரல் செக்ஸ்சுகுன்னே தனி ரக காண்டோம் இருக்குது. பனானா. பைன் ஆப்பிள். மல்லிகை. ஆரஞ்சுன்னு விதவிதமாய் இருக்குது." "ஏன் இந்த மாதிரி பேரு வச்சாங்க?" "அப்படிக் கேளுங்க. இதுல ஒரு உரையை மாட்டினால் அது வாழைப்பழம் போல் வாசனை கொடுக்கும். இன்னொன்றை மாட்டினால் ஆரஞ்சு போல் சுக வாசனையை நுகரலாம். இதனால், ஆக்டிவ் பார்ட்னர் இதை போட்டுக் கொள்ளும்போது, பாசிட்டிவ் பார்ட்னருக்கு, ஒரு இனிமையான வாசனை கிடைக்கும்." "டாக்டர் அய்யாவுக்கு ஒரு விண்ணப்பம். இந்த பனானா, பைன் ஆப்பிள் உறைகளில் ஒன்றை தாங்கள் போட்டுக் கொண்டு எங்களுக்கு டமான்ஸ் ஸ்டிரேட் செய்ய வேண்டும்." "எப்பா. நான் பிள்ளைக் குட்டிக்காரன். என்னை அப்படியே விட்டுடுங்க. மோகனன் கூப்பிட்டான்னு வந்தேன். வேற எந்த பாவமும் அறியேன். ஆனால், வாயிலோ அல்லது எதிலோ செக்ஸ் நோய் வந்தால், என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். இந்த மாதிரி விவகாரங்களில் நான் நீதிபதி அல்ல. வெறும் சாட்சிதான்." "நீங்க ரொம்ப ரொம்ப அழகு. எங்களுக்குன்னே பிறந்தவர் மாதிரி தோணுது. கிளப்ல சேர்ந்துடுங்க காந்தா" டாக்டர் காந்தராஜ், வெலவெலத்துப் போனார். இந்த மோகனன் சொன்னானென்று ஒரு மாறுதலுக்காக வந்த தன்னை, எங்கே ஒருவழி ஆக்கிவிடுவார்களோ என்று பயந்து போனார். பேண்டையும் சட்டையையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இரண்டு கைகளையும் பின்புறமாக வளைத்து பிட்ட த்தில் வளைத்துக் கொண்டார். இந்த "கேய் பையன்களைப் பற்றி ஆய்வு
பக்கம்:ஒத்தை வீடு.pdf/132
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை