பக்கம்:ஒத்தை வீடு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 131 "ஓரினச் சேர்க்கை என்பது இயற்கைக்கு விரோதமானது. ஒரு முழுமையான ஆண் என்கிற முறையில், எனக்கு முழு இன்பம் கிடைக்கிறது. என் பெண் பார்ட்னருக்கும் கிடைக்கிறது. இதை வெறுத்து ஒதுக்கிவிட்டு." அவையினர் அத்தனைபேரும் அவரைப் பகைப் பார்வையாக பார்த்தபோது, ஒருவர், அதுவும் சரியான பெரிசு, எங்கிருந்தோ வந்தவர்போல் இடையே குறுக்கிட்டார் "லுக் டாக்டர் காந்தராஜ்! உங்களை பொம்பள சுக உபதேசத்திற்காக இங்கே கூப்பிடல. அதனால ஹோமோ செக்ஸ் தப்பானதா? சரியானதா? என்ற ஆராய்ச்சி உங்களுக்கு அனாவசியம். இனிமேலும் பேசினால் எங்களின் ஒருவரின் மேலேயோ அல்லது கீழேயோ கிடத்தப்படுவீர்கள்! எங்களால் சமுதாயத்திற்கு எந்தக் கேடும் இல்லை. நாங்கள் உண்டு. எங்கள் ஹோமோ செக்ஸ் உண்டு என்று இருக்கும் வாயில்லா ஜீவன்கள் நாங்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், எங்களுக்குத்தான், இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை ஆனாலும் எங்களுக்கு அமெரிக்காவில் சுதந்திரம் கிடைச்சுட்டுது. பம்பாயில் பத்திரிகை வெளியிடுகிறோம். இந்த டர்ட்டி தமிழ்நாட்டில்தான் இன்னும் சுதந்திரம் கிடைக்கல. வந்த வேலையை கவனியுங்க டாக்டர் காந்தராஜ்." இன்னொருத்தவரும் எகிறினார். "ராமன் கெட்டதும் பெண்ணாலே, ராவணன் கெட்டதும் பெண்ணாலே என்று உங்களுக்கு புரியாதா காந்தா" காந்தராஜ் பயந்து போனார். தன்னை காந்தா என்று அழைத்ததில், அப்படி ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. பெரிய இடத்துப் பிள்ளையான மோகனனின் ஐ.ஏ.எஸ், தந்தை, இவருக்கு அறிமுகமானவர். அதன் மூலம் இந்த மோகனனின் பரிச்சயம் கிடைத்தது இவனுக்காகவே வந்தார். ஆனால், இங்கே என்னடா என்றால். என்றாலும், டாக்டர் காந்தராஜ் சுதாரித்துக் கொண்டார். அவருக்கு இயற்கையின் அசலை சொல்லாமல், தான் மட்டும் அசலாய் வெளியேறினால் போதும் என்றாகிவிட்டது பதமாக இதமாகப் பேசினார். "தம்பிகளா.. அண்ணன்களா. சக வயதுக்காரர்களா. உங்களை நான் குறை சொல்லவோ நிறை சொல்லவோ போவதில்லை. ஒரு வீடி. டாக்டர் என்கிற முறையில், உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராய் இருக்கிறேன் சீக்கிரமாய் கேள்வி கேட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/131&oldid=762185" இலிருந்து மீள்விக்கப்பட்டது