126 புதைமண் பார்வை. இன்னொன்றில் சுடலைத் தீப்பொறி. ஒ றை மார்பகம்: இடுப்பில் ஒரு பக்கத்தை காணவில்லை. கால்கள் ஒன்றில் லாவகம். இன்னொன்றில் ஆடு தளத்தை அழுந்தப்பிடித நாட்டிய பாணியில் சொல்லப்போனால் "தரைத்தட்டு"க் கோலம். நடுநிசி வந்துவிட்டது. திடீரென்று மிருதங்கத்தின் அலாரிப்பும், அந்த அர்த்த நாரீஸ்வரர் சிலைமீது பூக்களும் ஒரே சமயத்தில் உராய்ந்தன. பக்கவாட்டில், நீளவாகு தேக்குப் பலகையில் விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின், ஓட்கா, பிளடி மேரி போன்ற குடி வகையறாக்கள். இடது பக்கத்து நீளவாக்குப் பலகையில் பிஷ் பிங்கர், பிங்கர் சிப்ஸ், மட்டன், சிக்கன் வறுவல்கள், முந்திரிக்கொட்டை, வேர்க்கடலை, நனைந்த பருப்பு, நனையாத பருப்பு, உருளை வடிவமான வெங்காயம், அதேமாதிரியான வெள்ளரிக்காய், பிரியாணி, சப்பாத்தி, சமாச்சாரங்கள். இவை அத்தனையையும் ஓரங்கட்டிப் பார்த்தபடியே நின்றவர்கள், இரண்டு வரிசையாகப் போடப் பட்டிருந்த நாற்காலிகளில் உட்காரப் போனார்கள். அதுவரை, மனித குரோசோம்களில் நாலு கோடியே பத்து லட்சம் கேரக்டர்கள் இருப்பதை கண்டு பிடித்த லண்டன் மருத்துவ விஞ்ஞானிகளின் பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பை அலசிக் கொண்டிருந்தவர்கள் - வீட்டில் வெள்ளைக் கோட்டை தூக்கிப் போட்டுவிட்டு வந்திருந்த இவர்கள், முன் வரிசையில் இடது பக்கம் நட்புக்கு ஏற்ற வகையிலும், மேடைப் பார்வைக்கு ஏற்ற வகையிலும் உட்கார்ந்தார்கள். தர்மபுரியில், மூன்று மாணவிகளை, உயிரோடு கொளுத்திய கொடுமையை அரசியல் சாசனத்தின் வழியாகவும், இ.பி.கோ. மூலமும், அலசிக் கொண்டிருந்தவர்கள், வலது பக்கம் உட்கார்ந்தார்கள். இவர்களும் கருப்பு அங்கிகளை கார்களுக்குள் போட்டுவிட்டு வந்தவர்கள். பொறியாளர்களிடம், தான் வரைந்த கட்டிடப் பிளானை தலைகளாகப் பிடித்த கார்ப்பரேஷன் கிளார்க்கிடம் அதைச் சுட்டிக் காட்டினால் உடனே அவர் தவறுக்கு வருந்தாமல் 'எனக்குத் தெரியும் என்று திமிராக பதிலளித்ததை விளக்கிக் கொண்டிருந்த சீனியர் பொறியாளரை விட்டுவிட்டு, ஜூனியர் பொறியாளர்கள் இருக்கைகளில் ஒடிப்போய் உட்கார்ந்தார்கள் சாதிச் சண்டைகளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருத வேண்டும் என்று வாதாடி போராடிக் கொண்டிருந்த ஐ ஏ எஸ் , ஐ.பி.எஸ்.,காரர்களும், சமூகப் பிரச்சினையாக கருத வேண்டும் என்று பதிலளித்த அரசியல் வாதிகளும் அவசர அவசரமாய் ஒடி உட்கார்ந்தார்கள் இவர்கள் அல்லாது கம்பெனி நிர்வாகிகள், மாணவர்கள், டாக்சி டிரைவர்கள், என்.ஜி ஒ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனர்கள்,
பக்கம்:ஒத்தை வீடு.pdf/126
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை