120 ஒத்தை வீடு தப்பிச்சிட்டாங்க... இதை மாதிரி அதிகார பலம் இல்லாத அனாதைப் பெண்கள் என்ன செய்வாங்க? உதைக்கிற காலுலதான் விழனுமா? அடிக்கிற கையைப் பிடித்துத்தான் கெஞ்சனுமா?" சங்கரி, பாதிக் கண்களை மூடியபடி, மனோகரைப் பார்த்தபோது, அவன், அவளைச் சந்திக்க முடியாமல், முழுக் கண்களையும் மூடினான். என்ன சொல்கிறாள்? அவளோட நிலைமையைச் சொல்லாமல் சொல்கிறாளா... பேசிட வேண்டியதுதான். முழுமையாகப் பேசி. முடிவை அவளிடம் விட்டுவிட வேண்டியதுதான். எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டியதுதான். மனோகர், நாற்காலியில் நிமிர்ந்து உட்காருகிறான். மனம், விரக்தியையும், பற்றையும் விலக்கித் தள்ளியது. வாய் அதன் வெளிப்பாடாகியது. "ஒன் விஷயத்தில், நான் ஒரு மிருகமாகவும், எனக்கு நானே பித்துக்குளியாகவும் நடந்துக்கிட்டேன். இதற்கு, டாக்டர், பல்வேறு பின்னணிக் காரணங்களைச் சொல்கிறார். ஒனக்கு, வலிப்பு வந்தது எப்படி, உன்னை மீறிய செயலோ. அப்படித்தான் நான், நடத்திய ஆர்ப்பாட்டமும், அடித்த கூத்தும், என்னை மீறிய செயல் என்கிறார். ஆனாலும், அவர் சாக்கில், நான், நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்த விரும்பல. உன்கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிறேன். தயவுசெய்து என்னைப் பேச விடும்மா." "இப்போ. நான், எல்லா அம்சங்களிலும் மேன்மைப்பட்டதாய் நினைக்கேன். டாக்டரும் அதைத்தான் சொல்கிறார். இனிமேல் என்னோட சேர்ந்து வாழ்வதும், வாழாததும் ஒன்னோட உரிமை. பிளிஸ் பேச விடு. நீ என்னோட வாழ்வதற்கு வசதியாய் நானும் நடந்துக்குவேன். டாக்டர், சொன்னது மாதிரி, நம் இரண்டு பேருக்கும் சுற்றுப்புற மாற்றம் அவசியம். ஒன் முடிவு எப்படியோ. நான், வீடு பார்க்கேன். உனக்குச் சம்மதமுன்னால், புதுவீடு கிடைக்குற வரைக்கும், ஒன்னோட ஊருக்கே வரத் தயாராய் இருக்கேன். ஊர்க்காரன் அடங்கிட்டதால், அம்மா, அக்காவோட ஊருக்குப் போகப் போவதாய் ஒத்தக் காலில் நிற்கிறாள்" "இனிமேல், நீ சொந்தக் காலில் நிற்கப் போகிற சுயேச்சையான பெண் கணவன் கையை எதிர்பார்க்கிற ஒரு மனைவியின் அன்பு, மாசு, மருவற்று இருந்தாலும், சில சமயம் அது கட்டாயத்தின் பேரிலும் வரலாம். ஆனால், வேலைக்குப் போகிற ஒரு மனைவியின்
பக்கம்:ஒத்தை வீடு.pdf/121
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை