சு. சமுத்திரம் 109 முகம் போட்டு முதுகைத் தட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஒன் மேலே விழும் ஒவ்வொரு பெண்ணும் படிப்படியாய் கீழே போனாள். பாயில் விழுந்த பாவை, ஒனக்கு மெத்தையாகிறாள். அப்போதெல்லாம், ஒன் விடலை உடம்பில் ஒரு இயக்கம்; ஒரு சுகம். விதவிதமான பெண்கள். பெரும்பாலும் உள்ளூர் எதிரிகளின் பெண்கள். இவர்கள் உன்னை அடிக்க வரும் அப்பன் மார்களுக்கு எதிராய் வெகுண்டு, உன் முன்பக்கத்தில் முதுகைப் போட்டு, அவரைக் கொல்லுமுன் என்னைக் கொல்லுங்கள்' என்று கேடயமாய்ச் சுசூளுரைத்தார்கள்." "இப்படிப்பட்ட போலிக் கற்பனையும், நிசமான பாலியல் இயக்கமும் மெல்ல மெல்ல உங்களுக்கு ஒரு பழக்கமாகிறது. பழக்கம் வழக்கமாகி, அதுவே ஒரு போதை ஆகிறது. தெருச் சண்டைகள் நடக்கும்போதும், வரப்புகளை வெட்டி ஒன் வயலை ஆக்கிரமிப்புச் செய்த மிராசுதார்கள், ஒங்கம்மாவை சிரமப் படுத்தும்போதும், கல்லூரிப் படிப்பு சங்கடத்தைக் கொடுத்த போதும், இந்த பாலியல் பழக்கத்துடன் அடைக்கலம் ஆனாய்." "சைக் கிளில் கல்லூரிக்குப் போகும் ஒன்னை, சின்னப் பிள்ளைகளில் இருந்து பெரிய பயல்கள் வரை, ஒன் கையில் கிடந்த கடிகாரத்தைச் சாக்காக்கி, 'ஒட்டைக் கடிகாரம். ஒட்டைக் கடிகாரம் என்று நையாண்டி செய்த போதெல்லாம், நீ மிரண்டே, துவண்டே பெரிய ஆளாகாமல் போனோமே என்று துடித்துப் போனே. வீட்டுக்கு வந்ததும், பரிகாசிகளின் பெண்கள், ஒன் படுக்கை அறைக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டதால், சுய சேர்க்கையில் ஈடுபட்ட நீ, இறுதியில், அந்தச் சேர்க்கை களுக்காக கஷ்டப்பட விரும்பினே. அம்மா திட்டும்படி நடந்துக்கிட்டே சின்னப் பசங்க பரிகசிக்கும்படி, அவர்கள் கண் முன்னாலேயே கடிகாரத்தைக் கழற்றி, கீ கொடுத்தே அவர்கள் கிண்டலடிக்க அடிக்க, அவன் தமக்கைகள் உன் மானசீக காதலிகளாய் ஆனார்கள்." மனோகர், தலை தானாய் தொங்கியது; முகம் வெளுத்தது; நிமிர்ந்த மேனி, சரிந்து கிடந்தது. டாக்டர், இப்போது சுருதி மாற்றிப் பேசினார். “ஒனக்கு வந்தது, எனக்கு வந்தாலும், நானும் அப்படித்தான் நடந்திருப்பேன். பொதுவாக, வாழ்க்கையில், தாங்க முடியாத கஷ்ட நஷ்டங்களையும், சிறுமைகளையும் அனுபவிப்பவர்கள், ஒன்று ஒன் தந்தையைப்போல், பரம சாதுவாய் ஆவார்கள். அல்லது ஒன் அம்மாவைப் போல் பயங்கரியாய் ஆவார்கள் ஆனாலும், ஒனக்குத் தீமையே நன்மையாகி விட்டது. படித்துப் படித்து நல்ல
பக்கம்:ஒத்தை வீடு.pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை