108 ஒத்தை வீடு டாக்டர் சந்திரசேகர், மேற்கொண்டு படிக்க முடியாமல், மனோகரை நிமிர்ந்து பார்த்தார். அவர் மனதில், அவரே முன்னால் சொன்ன இலக்கிய நயமும், வாசிப்புச் சுகமும் மரித்துப் போயின. மரித்தவை, மனித நேயமாய் உயிர் பெற்றன. அவர், மனோகரின் தோளைத் தட்டிக் கொடுத்தார். அவனோ, தட்டப்பட்டது தெரியாமல் தலை தாழ்த்திக் கிடந்தான். அந்த மொஸைக் தரை, சாணம் பூசிய வெறுந்தரையானது. மேல் தளம் பனையோலைகள் பதித்த கூரையாகிறது. அப்பா செத்துக் கிடக்கிறார். வெளியே அம்மா, ஊரைத் துற்றி மண் வாரிப் போடுகிறாள். சிலர் திட்டுகிறார்கள். ஊர் வழியில் பிணம் போவாது என்று அவளை மிரட்டுகிறார்கள். பாவாடை-தாவணி அக்கா, அவன் தலையில் முகம் போட்டு விம்முகிறாள். ஈரப் பசையில், இருவர் விழிகளும் ஒட்டிக் கொள்கின்றன: விநாடிகள், நிமிடங்களாய் மாறுகின்றன. எப்படிப் பேச்சைத் துவக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த டாக்டருக்கு, மனோகரே இறுதியில் அடியெடுத்துக் கொடுக்கிறான். "அப்போதான். அப்படின்னனா. இப்பவும் இப்படி. பட்ட காலுலயே படும்; கெட்ட குடியே கெடும் மாதிரி ஆகிட்டு." டாக்டர், அவன் பேச்சைப் பிடித்துக் கொள்கிறார். "அப்போ. அப்படி இருந்ததால்தான், இப்போ இப்படி இருக்குது. ஆமாப்பா. ஒன்னோட பிரச்சினை, அடிப்படையில் செக்ஸ் பிரச்சினை அல்ல. ஆழ் மனதில் வேரூன்றிய பாதுகாப்பின்மை உணர்வு. அதுதான பீலிங் ஆப் இன் செக்யூரிட்டி வெளி மனதில் பாலியல் இயலாமை. வெளிப் பாடுகளாய் வேடம் போடுது. இந்த அடிமனப் பெரும் பயத்தை, நீக்கினால் தவிர, செக்ஸ் இயலாமையைப் போக்க முடியாது. ஒங்க அம்மா, சிறுமைப் படுத்தப்பட்ட போதெல்லாம் சிறுவனான நீ எதிரிகளை அடிக்கக் கைகளைத் துரக்கி இருக்கே... பற்களைத் கடித்திருகிகே. பெரியவனாகாமல், போயிட்டமேன்னு வருத்தப் பட்டிருக்கே. இயலாமையில் துடித்திருக்கே கற்களைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவற்றை எறிந்தால் என்ன ஆவோமோ என்று நினைத்து சும்மா இருந்திருக்கே" "பன்னிரண்டு வயதில், அம்மா தாக்கப்பட்ட போது, நீயும் ஒரு பெரிய பையனால் தாக்கப்பட்டு, அவனை மாதிரி பெரியவனாய் ஆகாமல், போனதுக்கு வருத்தப்பட்டே. சரியா?" ஆனாலும், யதார்த்தத்தின் சூடு தாங்காமல், பேன்டஸி எனப்படும் ஒரு கற்பனை உலகில் உலவி இருக்கே எதிரிகளின் பெண்கள் ஒனக்கு ஆறுதல் சொல்வது போல் ஒரு கற்பனை. அவர்கள் ஒன் முகத்தோடு
பக்கம்:ஒத்தை வீடு.pdf/109
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை