பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

589


தளிரும் காதணியாகச் செருகிச் சூடப்பட்டது. பூவுடன் சேர்த்தும் தனித் தளிராகவும் செருகிக்கொண்டனர். மேலே அகத்துறைத் தலைவன் ஒருகாதில் செயலை மலரைச் செருகியதைக் கண் டோம். அவ்வாறு செருகியவன் அதன் சிவந்த தளிரையும் சேர்த்தே செருகிக் கொண்டான். காதில் பூ அமர, அதன் தளிர் தொங்கித்தோளில் அசைந்தாடியதை, 'அம் தளிர்க் குவவுமொய்ம்பு (தோளில்) அலைப்ப" - என்றார் கபிலர். இவ்வாறு இதன் தளிர் காதில் செருகி அணியப்படுவதை 'வண்காது நிறைத்த பிண்டி ஒண்டளிர்” (திருமுருகு:30) 'செயலைத் தண்டளிர துயல்வரு காதினன்’ (திருமுருகு : 206) - என முருகனுக்கும் ஏற்றிப்பாடினார் நக்கீரர். தளிர்த் தழை இவ்வாறு காதணியாவதோடு தலைவிக்குத் தலைவனால் தழையுடையாக்கி வழங்கவும் பயன்பட்டது. மகளிர் விரும்பியும் தழையுடையாக்கி அணிந்து மகிழ்ந்தனர். இவ்வாறு தழையுடைச்காகத் தளிர் கொய்யப்பட்டதால், 'திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச் செயலை முழு முதல் ஒழிய'2 -என மரமே மொட்டையான தாகப் பாடப்பட்டது. மகளிரது உடல் நிறத்திற்கு இத்தளிர் உவமையாகக் கூறப்படும். 'செயலை அந்தளிர் அன்னவென் மதனில் மாமெய்’8 -என்றாள் ஒரு தலைவி. இச்செயலையை, 'சிலம்பின் தலையது செயலை' (ஐங் : 211) :மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த செயலை' (நற்: 244 : 9, 10) என்பவை மலையிடத்து மரமாகக் காட்டுகின்றன. "மைத்தார் அசோகம் மடலவிழ் கொந்தார் இளவேனில் வந்தது" - என்னும் அடிகள் இம்மலர் இள வேனிற் பருவத்தில் மலர்வதைக் குறிக்கின்றன. 1 குறி. பா 119 3 நற். 244 : 10, 11. 2 குறுந் 214 X- 4 Pa໖ມຸ 8 ; @ລour