பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

563


பாட்டில் குறித்தார்' எனும் வினா எழலாம், அக்காலத்தில் நள்ளி ருளில் நாறும் சிறப்பால் இப்பூ ஒன்றே கருதப்பட்டு இத்தொடர் அமைக்கப்பட்டிருக்கும் என்பதே அதற்கு விடை. எனவே, மயிலை' என்னும் இடுகுறிப்பெயரே அதன் இயற் பெயர் என்றாகின்றது. இச்சொல் கொண்டே இப் பூவின் தன்மைகளை நாம் அறிய முடிகின்றது. தொன்மை நூலாகிய புறநானூற்றில் இம் மயிலை, 'கானக் காக்கை கலிச்சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்' - எனப் பாடப்பட்டுள்ளது. ஒரு குறுமகள் தன் கூந்தலில் இருமருங்கும் இப்பூவாலாகிய கோதையைச் சூட்டிக்கொண்டுள்ளாள். இக் காட்சிக்குக் காட்டுக்காக்கையின் தழைத்த சிறகு உவமை யாகக் கூறப்பட்டுள்ளது. கானக் காக்கையின் சிறகின் விளிம் புகள் வெண்மை இறகு கொண்டவை. அவ்வெண்மையும் ஒழுங்கும் கொண்டு மயிலை பூங்கோதைக்கு உவமையாயிற்று. 'இல்வளர் முல்லை மல்லிகை மயிலை'2 -என்றபடி மயிலை இல்லத்தில் வளரும் முல்லை இனத்துக் கொடி மலர். இது கொடிமல்லிகை எனவும் குறிக்கப்படும். 'மெளவல் சூழ் மயிலைப் பந்தர்' (சீவ. சி , 485) "பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர்' (திருவிளை தருமிக்கு : 19) என்பனவற்றின் படி பந்தரில் படர்வது. முல்லை, மெளவல், மல்லிகை முதலிய முல்லை நில மலர் களுடன் சேர்த்துப் பேசப்படுவதால், இது முல்லை நில மலர். இதன் நிறமும் முல்லை மல்லிகைபோன்ற வெண்மை உடையது. இதனைப் பரஞ்சோதி முனிவரும், ‘’வெள்ளை மந்தா முல்லை மல்லிகை வெடிவாய்ச் சாதி கள்ளவிழ் மயிலை ஆதி வெண் மலர்’3 - என வெண் மலராகப் பாடினார். 1 புறம்: 842 : 1, 2. 8 திருவிளை. பு : இந்திரன் முடி 12:2, 8 2. சிலம்பு 5: 191, -