பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317


"சூடா வாகைப் பறந்தலை' - என்றார். வளத்தால், போர்க்களத்தால், வெற்றியால் பெயர் நாட்டிய வாகைப் பூ, புகழ்ப் பூவும் ஆகும். வாகைப் பூ என்றாலே 'புகழ்ப் பூ" என்னும் வழக்கு இருந்தது. இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் சுட்டிக் காட்டினார். வாகை என்னும் சொல் அகத்தி யையும் குறிக்கும். ஆனால், வாகைக்குரிய பெருமை அகத்திக்கு இல்லை. சொல்தான் உரியதேயன்றிப் புகழ் உரியதன்று. காட்டுப் பன்றியின் குருதி படிந்த பல்லிற்கு அகத்திப் பூவை உவமையாகக் கூறுவர். இவ்வகையில் அகத்திப் பூவை உவமையாக்கும் கடியலூரார், - "புகழா வாகைப் பூவின் அன்ன வளை மருப்பு ஏனம் 2 -என்றார். அகத்தி புகழா வாகைப் பூ எனவே, வாகை வெற்றிப் பூவுடன் புகழ்ப் பூவும் ஆகின்றது. வகைக்குள் புறப் பூக்கள் வெட்சி முதல் வாகை ஈறாக அமைந்த புறப் பூக்கள் எட்டும் இலக்கண, இலக்கியங்களில் பரவலாகவும் விரவலாகவும் நிரவலாகவும் இடம் பெற்றுள்ளன. பெருமையாகவும்; அருமை யாகவும் உரிமையாகவும் பேசப்படுகின்றன. பலவற்றை இலக்கிய அளவிலேயே காண முடிகின்றது. சிலவற்றின் பெயர்கள் மாறின, மறைந்தன. இம்மாற்றத்தாலும் மறைவாலும் மருத்துவத்திற்குப் பயன்பட்டநிலை மாறுபட்டும் வேறுபட்டும் ஊறுபட்டும் பயனளிக் காது போயின; கெடுதியையும் விளைத்துள்ளன. தற்காலத்தில் இவற்றில் எப்பூவும் சூடப்படுவதில்லை. புற நிகழ்ச்சியாகிய போர் மரபு இல்லையென்றாலும் ஒப்பனையாகவும் சின்னமாகவும் சூடப்படுவதில்லை. இதனால் பல நல்ல மரபுகள் மாறின; தேய்ந்தன; மறைந்தன. சிலவற்றை அடையாளங் காண்பதே அரிதாயிற்று. . இலக்கிய இலக்கண நூல்கள் காட்டும் அடையாளங்களைக் கொண்டு இவற்றை இனத்தாலும் குணத்தாலும் நிறத்தாலும் நிலத்தாலும் பின்வருமாறு வகுத்தமைக்கலாம் : 1 அகம் : 1.25 : 19, 2 பெரும்பாண் : 109, 110.