பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

64 ஆருயிர் மருந்து லையும், அவர்கள் அதை உண்டு மகிழ்வதையும் கண்ட காவலர், தாம் கண்டவற்றை அரசனுக்கு அறிவிக்கச் சென்றனர். அரசன் திருவோலக்கம் சோழன் மாவண்கிள்ளி யென்னும் மன்னன் தன் கோப்பெருந்தேவி யோடு சோலைவளம் காண அழ கிய பூம் பொழில் புகுந்தான். பூம் பொழிற் சோலை யிலே அவன் கண்ட காட்சிகள் பலப்பல. எத்தனையோ வகையில் சிறந்த இயற்கை வளங்கள் நிறைந்த அம் மலர்ச் சோலையில் மகிழ்ந்து அரசியோடு சுற்றி வந்தான் சோழன். பின்னர் அரசியல் அரங்கில் ஆடுகள மகளி ரும், பாடுகள மகளிரும் ஆடியும் பாடியும் அரசனுக்கு மகிழ்ச்சியை விளைவித்தனர். அப்பெருந் சோலையினி டத்து அரசனோடு வந்து நகர மக்கள் பலரும் சுற்றிச் சுற்றிப் பல்வேறு வகையில் ஆடலும் பாடலும் இயற்றி மகிழ்ச்சிக் கடலுள் மூழ்கி இருந்தனர். மன்னனும் பல் வேறு வகைப் பாடல் ஆடல்களிலும் கலந்து, மகிழ்ந்து, பின்னர் அழகிய மணி மண்டபத்துக் கால் வைத் தேறினன். இவ்வாறு சிறக்க விற்றிருந்த செந்தமிழ் வேந்தன் முன்பு, சிறை கோட்டத்திலிருந்து வந்த காவலர் ′ஒளி யொடு வாழி ஊழிதோ றூழி, என்று வாழ்த்தி மணி மேகலை சிறைக் கோட்டத்தில் சோறளிக்கும் சிறப்பினை எடுத்துக் கூறினர். அது கேட்ட அரசன் வியந்து, 'அம் மடக் கொடியை அழைத்து வருக' என்று ஆணை தந்தனன். அவன் வாய்மொழிப் படி காவலர் சென்று மணிமேகலையை அழைத்துச் சென்று மன்னவன் முன் னர் நிறுத்தினர். அவளைக் கண்ட அரசன் 'யார்' என 76