53
ஆருயிர் மருந்து
சூழ்ந்து கொண்டார்கள். அவனைக் கண்டு அவன்
தவறி வந்த தனியன் என உணர்ந்தனர். அவன்
உடல் நல்ல உணவாகும் என்று’ கூறி அவனை எழுப்
பினர். ஆனால் அச் சாதுவன் அவர்கள் பேசும்
மொழியை நன்கு அறிவான் ஆதலின் அவர்களோடு
பேசி அவர்கள் எண்ணத்தை மாற்றினான். அவர்கள்
தங்கள் குரு மகன் ஓரிடத்துள்ளான் என்றும், அவனை
வந்து காணவேண்டுமென்றும் அழைத்தார்கள். அவ
னும் அவர்களோடு சென்று குருமகனைக் கண்டான்.
குருமகன் கொலைமகனோ என்னுமாறு வீற்றிருந்
தான். சுற்றிலும் கள்ளடு குழிசியும், கழிமுடை
நாற்றமும், வெள்ளென்பு உணங்கலும் நிறைய இருந்
தன. அவற்றின் நடுவில் ஒரு பெண்ணொடு கரடியைப்
போன்று அவன் உட்கார்ந்திருந்தான். அவனைக் கண்டு
சாதுவனும் அவனுடன் அவன் மொழியில் பல
பேசினான். அதைக் கேட்ட தலைவன் அவனை அங்கு
வந்த காரணம் என்ன என்று கேட்டான். சாதுவன்
தான் கப்பல் உடைந்து கரை சேர்ந்ததைக் கூறினான்.
அதுகேட்ட தலைவன்
வருந்தினன் அளியன் வம்மின் மக்காள்
நம்பிக்கு இனையளோர் நங்கையைக் கொடுத்து
வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும்.
என்று ஆணையிட்டான். அதுகேட்ட சாதுவன் நடு
நடுங்கினான். .அவை ஒன்றும் தனக்கு வேண்டாம்
என்றான். தலைவனே பெண்டிரும் உண்டியும் இன்
றெனில் மாக்கட்கு ஞாலத்து உறுபயன் உண்டோ?'
என்று கேட்டான். சாதுவன் அவற்றை யெல்லாம்