34
ஆருயிர் மருந்து
'உயிர்க்கொடை பூண்ட உரவோ யாகிக் கயக்கறு நல்லறம் கண்டனை'
என்றாள். இவற்றையெல்லாம் கேட்டு நின்ற மணி மேகலை அப்பாத்திரம் தன் கையிடை வந்து நின்றதை எண்ணி எண்ணி வியப்படைந்தாள். சென்ற பிறவியில் கணவெனொடு எரியிடை மூழ்கும் காலத்து, சாதுசக் கரனை உண்பித்தது போல் கனாமயக்குற்ற ஒன்றே, அதன் பயனை இப்பாத்திர உருவில் தன் கைப் புகுத் தியதோ என்று எண்ணினாள். அதே வேளையில் தம் நாட்டில் எவ்வளவோ மக்கள் கந்தை உடுத்து, வயிறு வற்றி உணவுக்கு ஏங்கி நிற்கும் காட்சியும் அவள் கண் முன் நின்றது.
ஆகவே விரைந்து புறப்பட்டுச் சென்று, தாய்நா டடைந்து அவ்வேழை மக்களுக்கு உதவத் தான் விழை வதாகக் கூறினாள். அதுகேட்ட தீவதிலகை வாழ்த்தி விரைந்து ஈங்குநின்று எழுவாய் என்று விடையளித் தனள், மணிமேகலையும் அவளை வணங்கி விடைபெற்று, அத்தீவினையும் போற்றி, வான் வழி மந்திரத்தாலே பறந்து பூம்புகார் நகர் வந்து சேர்ந்தாள். அதற்கு இடையில் ஏழு நாட்கள் கழிந்தன.
பிரிந்தவர் கூடினர் புகார் நகரிலே ஏழாம் நாளில் தன் மகள் வரு வாள் என்ற தெய்வ வாக்கை நம்பி உயிர் வாழ்ந்த மாதவியோ ‘எழுநாள் வந்தது என் மகள் வாராள் ’ என்று வெம்பிக் கொண்டிருந்தாள். சுதமதி அவளைத் தேற்றித் தேவ வாக்கு எப்படியும் பொய்க்காது என்ற னள். அதே வேளையில் வான்வழி வந்த மணிமேகலை