பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஆருயிர் மருந்து

மற்றவர் பிறப்பையும் அவர்கள் அவளுடனே பூம் புகாரில் இருப்பதையும் உணர்த்திற்று மணிமேகலா தெய்வம்.

வருங் காலம்

மேலும் அது மணிமேகலையின் வருங்காலத்தைப் பற்றி யெல்லாம் குறிப்பாகச் சொல்லி மூவகை மந்தி ரங்களையும் உணர்த்திச் சென்றது. அன்றைய நிலையில் மணிமேகலை புத்த பீடிகையைக் கண்டு பழம் பிறப் பையும், தரும நெறியினையினையும் கேட்டறிந்த பின் மேலும் பல சமய உண்மைகளையும் கேட்பாள் என்ப தைக் கூறிற்று. பல சமய வாதிகளது உண்மைகளை ஆராயும் காலத்து, அவர்கள் மேகலையின் இளமைத் தன்மையைக் கண்டு அவளிடம் ஒன்றும் உரையாது சினத்தலும் கூடும் என்று கருதி அவள் உருவத்தை மாற்றிக் கொள்ளும் மந்திரம் ஒன்றையும், வான்வழிப் பறந்து செல்லும் மந்திரம் ஒன்றையும் அத்தெய்வம் அவளுக்கு உபதேசித்தது, உபதேசித்து உத்தரவு பெற்று வான் வழிப் பறந்து சென்ற .அத் தெய்வம் மறுபடியும் ஏதோ நினைத்துக் கொண்டு திரும்பி வந்தது. வந்து,

மறந்தது முண்டு
   சிறந்த கொள்கைச் சேயிழைகேளாய்
   மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
   இப்பெரு மத்திரம் இரும்பசிஅறுக்கும்.

என்று சொல்லிப் பசியாதிருக்க ஒருமத்திரத்தையும் கொடுத்து வான்வழிச் சென்றது.