பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொள்கையையும் நோக்கத்தையும் திருத்தியமைக்கப் பாடுபட்ட காலம் ஆகும். இது 1920-இல் தொடங்கி 1929-இல் முடிவுறுகிறது. அது முதல் 1938 வரை அவர் தம் தியாகங்களால் நாட்டின் பொதுமக்கள் உள்ளத்தில் அசைக்க முடியாத இடம் பெற்று, நாட்டின் பெருந்தலைவர்களுடன் போட்டியிட்டுப் பாராட்டுதலுக்கும் உரியவரானார். 1938 முதல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் நாட்டின் எதிர்ப்பு சக்திகளனைத்தையும் ஒருங்கே தன்னந்தனயராய் எதிர்த்து நின்று, உலக வரலாறே என்றும் எங்கும் காணாத மின்னல் வெற்றிகள் கண்டார். வெற்றிக் கொண்டாட்டத்தில் கலவாது மாயமாய் மறைந்த அவர் வெற்றி எவரும் பங்கு கொள்ள முடியாத, எவர் பொறாமைகளுக்கும் எட்டாத உச்சநிலை வெற்றியாமைந்துள்ளது.

அரசியல் நுழைவு : ஒத்துழையாமைப்போர்

சுபாஷ் சந்திர போஸின் அரசியல் பணி தேசபந்து ஸி.ஆர். தாஸின் ஒப்பற்ற தலைமையில் தொடங்கிற்று, மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போரை வங்கத்தில் முன்னின்று நடத்திய அவ்வொப்பற்ற தலைவருக்குப் போஸ் அந்நாளில் ஒரு வலக்கையாக உதவினார். தலைவர்களின் அழைப்புக் கிணங்கி அன்று வழக்கறிஞர்கள் பலர் வழக்கு மன்றத்தைத் துறந்தனர். உயர் பணியாளர் பலர் தம் பணிகளைத் துறந்தன. மாணவரும் ஆசிரியரும் பலர்தம் பள்ளிகளையும் துறந்து நாட்டு மக்கள் போரில் பங்கு கொண்டனர். இங்ஙனம் கண் திறக்கும் கல்வி வளர்ச்சியிழந்த மாணவர்கட்குத் தேசச் சார்பாக கல்வியூட்ட வேண்டுமென்று நினைத்த தலைவர்கள் பல தேசியப் பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தலாயினர். வங்க நாட்டுத் தலைநகராகிய கல்கத்தாவிலும் அத்தகைய தேசியக் கல்லூரி ஒன்று திறக்கப் பட்டது.ஸி.ஆர். தாஸ் இக்கல்லூரிக் கேற்ற தலைவர் போஸ் தான் எனக் கண்டு அவர் பொறுப்பில் அக்கல்லூரியை விட்டு வைத்தார்.

மேல்நாடுகளில் போஸ் படிக்கும்போதும், அந்நாடுகளைச் சுற்றிப் பார்வையிடும்போதும் இந்தியாவுக்கு எது தேவை, எது இந்தியாவின் நலத்துக்கு உகந்தது என்ற குறிக்கோளுடனேயே அவர் எதையும் கவனித்தார். ஆகவே பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தாம் கண்டறிந்த மெய்மைகளையெல்லாம் தம்