பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
154 ||

அப்பாத்துரையம் - 6



அந்நிலையிருக்க முடியும். அதன் பலாபலன்களை எவராலும் அழிக்க முடியாது. அது கற்றுக் கொடுத்த பாடங்கள் நம்மை ஆட்கொள்ளுகின்றன; அதிகப் பலம் பொருந்திய மற்றொரு புதிய போருக்கு வழியையும் திறந்து விடுகின்றன. அதற்கெனச் சிறந்த தயாரிப்புகளும் கைகூடி விடுகின்றன. 1857இல் நேர்ந்த தோல்வி பற்றிய பாடங்களைக் கற்றுவிட்டோம். அந்த அனுபவம் காரணமாக, இந்த யுத்தத்துக்கு நம்மைத் தயாராக்கிக் கொண்டோம். இதுதான் இந்திய விடுதலைக்காக நடத்தப்படும் இறுதிப்போர்.

1857-இல் ஒருநாள் விடியற் காலையில், இந்தியர்கள் திடீரென ஆயுதமேந்தி பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட ரென்று நினைப்பது தவறு. எந்தப் புரட்சிப் போரும் அவ்வளவு அவசரமாகவோ ஒழுங்கீனமாகவோ நடைபெறுவதில்லை. நம் தலைவர்கள், அவர்களால் இயன்ற அளவு யுத்தத் தேவைகளைத் தயாரித்துக் கொண்டுதான் போரில் குதித்தார்கள். ஆனால் வெற்றியடையும்வரைத் தேவையான சாதனங்களின் குறைபாடு நேர்ந்துவிட்டது. அந்தப் புனிதப் போரில், முக்கிய தலைவர்களுள் ஒருவராகிய நானாசாகிப், ஐரோப்பா முழுமையும் சுற்றுப் பிரயாணம் செய்து, வெளிநாட்டு உதவியையும் துணையையும் பெறத் தன்னாலானமட்டும் முயற்சி செய்தார். துரதிர்ஷ்ட வசமாக அவரது முயற்சிகளில் தோல்வி நேர்ந்துவிட்டது. அந்தப் புரட்சி நேரத்தில் உலகத்து நாடுகளுடன் பிரிட்டன் நட்புக் கொண்டிருந்ததால், இந்திய மகாஜனங்களை நசுக்குவதற்கு வேண்டிய பலத்தையும் சாதனங்களையும் அது சேகரித்து வைத்திருந்தது.

சிலகாலம் பொது மக்களிடையேயும் இந்தியச் சிப்பாய் களிடையேயும், போற்றத்தகுந்த முறையில் புத்திசாலித் தனமான பிரச்சாரம் இந்தியாவுக்குள்ளே நடைபெற்றிருந்தது. அதற்கேற்ப, குறிப்புக் காட்டியதும் தேசத்தின் பல பாகங்களிலும் ஏக காலத்தில் அந்தப் புரட்சிப் போர் ஆரம்பமாயிற்று. வெற்றிமேல் வெற்றி அடைந்தனர் புரட்சி வீரர்கள். வட இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களெல்லாம் பிரிட்டிஷாரிடமிருந்து விடுவிக்கப்பட்டன. புரட்சி ராணுவம் வெற்றிக் கொடியுடன் பவனிவந்தது. இப்படியாக எல்லா இடங்களிலும் புரட்சியின்