பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 113


நமது போராட்டத்துக்கு ஷோனான் முக்கியத்துவம் வாய்ந்திருக்கிறது. இந்தியச் சுதந்திரக் கழகத்தின் தலைமைக் காரியாலயம் இங்கே தான் இருக்கிறது. ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்காரும் இங்குதான் நிறுவப் பெற்றிருக்கிறது. இந்தியத் தேசிய ராணுவத்தின் தலைமைக் காரியாலயமும் இங்கே தான் இடம் பெற்றிருக்கிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷாரின் கோட்டையாக விளங்கிய இந்த ஷோனான், இன்று நமது இயக்கத்தின் தலைமைக் கோட்டையாக மாறியிருக்கிறது. ஒரு ராணுவத்துக்கும் அதன் தளபதிக்கும் எவ்வளவு தொடர்பு இருக்குமோ, அதே தொடர்பு தான் ஷோனானுக்கும் கிழக்காசியாவிலுள்ள இதரப் பகுதிகளுக்கும் இருக்கிறது. ஆதலால் இங்கிருந்து கிளம்பும் எதிரொலி கிழக்காசியா முழுமையும் வியாபிக்கும். உங்கள் நடவடிக்கையைப் பொறுத்திருக்கிறது பிற இடங்களின் நடவடிக்கை. எனவே, உங்கள் பங்கும் பொறுப்பும் மகத்தானவைகளாகும்.


'இந்தியா ஒரு சுதந்திர நாடு' என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அன்னியனின் படையெடுப்பு அபாயம் நருங்கி வந்துவிட்டதென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது, அந்தச் சுதந்திர சர்க்கார் என்ன செய்யுமென்பதைச் சிறிது சிந்தியுங்கள். நாடு முழுமையுமுள்ள சகல சக்திகளையும் செல்வங்களையும் ஒன்று திரட்டுமல்லவா? அது தான் எந்தச் சுதந்திரச் சர்க்காருக்கும் இயற்கையான கடமை; மிகச் சாதாரணமானதுங்கூட. இந்த உண்மையை எளிதில் உணர்ந்து கொள்வீர்களானால் சுதந்திரம் பெற்று அதைக் காப்பாற்றும் வேலையில் உங்கள் கடமை என்னவென்பதையும் எளிதில் தெரிந்து கொள்வீர்களென்பதில் ஐயமில்லை.

யுத்த நெருக்கடிக்குள்ளாகிய எந்தச் சுதந்திர சர்க்காரும், அதன் மக்களிடம் பணத்துக்காகப் பல்லைக் காட்டாது. இது வரை நாம் செய்து வந்தது போல், வேண்டுகோளுக்கும் கூட்டங்களுக்கும் இடமிருக்காது. ஒரே ஒரு அறிக்கை தான்; குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களிடமிருந்து இன்னின்னது தேவையென்பதை மட்டும்தான் அவ்வறிக்கை கூறும். எவ்வித முணுமுணுப்புமின்றி மக்கள் தானாகவே முன் வந்து,