பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
110 ||

அப்பாத்துரையம் - 6



நீங்கள் மறந்து விட்டீர்களா?” என்று கேள்வியெழுப்பியதும் நானறிவேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஜான்ஸி ராணியைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறித்தானாக வேண்டும். ஜான்சிராணி யுத்தம் தொடங்கியபோது வயது இருபதுதான். அந்த இளம் வயதுப்பெண், குதிரை மீதேறி போர்க்களத்தின் நடுவில் வாள் வீசினாளென்றால், அவளது ஊக்கமும் உணர்ச்சியும் எவ்வளவு இருந்திருக்குமென்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அவளை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதியே கூறினான்: “கலகக்கார ஜான்ஸிராணியே புரட்சி வீரர்களி லெல்லாம் தலைசிறந்த பராக்கிரமசாலி” என்று. அவ்வளவு விசேட பராக்கிரமத்தை ஜான்ஸிராணி பெற்றிருந்தாள். அந்தத் தளபதியால் அதனை மறைத்துக் கூறுவதற்குக்கூட இயல வில்லை. முதன்முதலில் ஜான்ஸிக் கோட்டைக்குள்ளே யுத்தத்தைத் தொடங்கினாள்; கோட்டை முற்றுகையிடப் பட்டதும் தப்பியோடினாள் கல்பிக்கு. தான் மட்டுமா? மற்றும் பல வீரர்களோடு. அங்கிருந்து தொடங்கினாள் யுத்தத்தை; அப்பொழுதும் தோல்வி. பின்வாங்கிச் சென்று தாந்தியா தோபியோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, குவாலியர் கோட்டையைத் தாக்கி அதைக் கைப்பற்றினாள். குவாலியர் கோட்டையை முக்கிய படைத்தளமாகச் செய்துகெண்டு யுத்தத்தை நடத்தினாள். கடைசியாக அவ்விடத்தில் யுத்தம் செய்யும் பொழுதே யுத்தகளத்தில் இறந்தாள்.

ஒன்றுக்கு அதிகமான தோல்வி நேர்ந்தும், சலிக்காது போர் செய்ய எவ்வளவு தைரியம் அவளுக்கு இருந்திருக்க வேண்டும்? நினைத்துப் பாருங்கள். 20 வயதுள்ள ஜான்ஸி ராணி இவ்வாறு மனம் தளராமல் போரிட்டது நமது பல தலைமுறைகளுக்குப் பெருமையும் உணர்ச்சியும் ஊக்கமும் அளிக்கக்கூடிய உதாரணமன்றோ? அவளது தோல்வி நமது துர்ப்பாக்கியமே. அவளது தோல்வி இந்தியாவின் தோல்வியாகும். அவள் உடல் அழிந்து விட்டது; ஆனால் அவளது ஆத்மா ஒருகாலும் அழியாது. அந்த ஒரு ஜான்ஸி ராணியின் ஆவி மற்றொரு தலைமுறையில் பல ஜான்ஸி ராணிகளைத் தோற்றுவித்து வெற்றி மாலை சூடுமென்பதில் சந்தேகமில்லை. ஒரு சில ஆயிரம்