80 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
வந்துவிடுவர் என்ற நிலை வந்த பின்னும் போஸ் இதனை விரைவுப் படுத்தினரேயன்றி நிறுத்தவில்லை. கட்டிமுடிந்தவுடன் வந்த பிரிட்டிஷ் படைகள் தம் முதல் சீற்றத்துக்கு அதை இரையாக்கின.
"கற்றூண் பிளந்தது”
இ.தே.ரா.வின் போர் முயற்சிகளால் இனிப் போர் வீரர்களுக்குக் கேடன்றி வேறு பயனிராது என்று தெளிவு பட்டபின் 1945 ஜூன் 234-ஆம் தேதி போஸ் போர் நிறுத்தக் கட்டளையிட்டார். தோல்வியறியாத தளரா உளங்கொண்ட போஸ் நாட்டு மக்கள் நன்மையை எண்ணித் தற்காலிகத் தோல்வியை ஒப்புக் கொண்டது. இவ்வொரு தடவைதான். ஆனால் இதன் பின் அவர் வாழ்க்கையும் மறுபடியும் மறை வென்னும் மாய இருளில் கலந்துவிட்டது.எச்சுமைக்கும் தளர்ந்து வளையாத கல் தூண் பிளந்திற்றது போல் அது தோன்றிற்று. அது பிளந்திற்றதோ விலகி நின்றதோ யார் அறிவார்!
1945-ஆம் ஆண்டு டோக்கியாவுக்கு விமானத்தில் செல்லுகையில் விமானம் விழுந்து நொறுங்கி மாண்டார் என்று அறிவிக்கப்பட்டது. இதனைப் பலர் உறுதிப்படுத்தினர் - பலர் மறுத்தனர். ஆனால் 1942 மார்ச் 23-லும் இத்தகைய செய்தி வந்து பின்னால் இறந்தது சுபாஷ் போஸ் அல்லர்; ராஷ்பிஹாரி போஸ் என்று கூறப்பட்டது கண்டு, போஸின் தமையனார் சரத்பாபுவும் அவர் தோழர்கள் பலரும் இன்னும் போஸ் இருக்கிறார் என்றே நம்புகிறார்கள். எது எப்படியாயினும் போஸின் புகழ் உரு இந்தியர் மனத்தில் என்றும் மறையாதென்பது உறுதி. அவர் பெயரும் புகழும் வீரமும் சிந்திக்கும் இந்திய இளைஞர், மங்கையர் உள்ளங்களி லெல்லாம் வருங்காலக் கனவுலக போஸ்கள் கருவுயிர்த்து வளர்ச்சி பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
விடுதலைப் படைவீரர் தவிப்பு
தலைவர் பெருந்தகை சுபாஷ் போஸையே உயிராகக் கொண்ட பல உடல்களான விடுதலை இந்தியப் படையினர் தலை துண்டிக்கப்பட்ட உடல்களென மேனாடுகளிலும் கீழாசியாவிலும் காட்டிலும் நாட்டிலும் பல்வகை அவதிகட்காளாகி மழ்கினர்.