70
அப்பாத்துரையம் - 10
நாட்டினர் விடுதலை, அஃதாவது ஆங்கில நாட்டார் அமெரிக்க நாட்டின்மீது செலுத்திய ஆட்சியை இழந்தமை ஆங்கில மக்களைத் தட்டியெழுப்பிற்று. தம் அரசர் விடுதலைக்கு எதிரிமட்டுமல்லர்; திறமுமற்றவர் என்று அது அவர்களுக்கு எடுத்துக்காட்டிற்று. மூன்றாம் ஜார்ஜின் தன்னாண்மை ஆட்சிக்கும் அவர் சார்பாளரான நார்த்பெருமகன் அமைச்சர் நிலைக்கும் இது சாவுமணி யாயிற்று.
அமெரிக்கக் கிளர்ச்சியின் போது அமெரிக்கக் குடிமக்கள் கோரிக்கையை ஆதரித்து நின்ற ஆங்கிலப் பெருந்தலைவர் இருவர். ஒருவர் சாதம் கோமகனான (மூத்த) வில்லியம் பிட் என்பவர். இன்னொருவர் ஆங்கிலநாட்டின் ஒப்புயவர்வற்ற சொற்பொழிவாளரான பக் என்பவர். இவர்களில் முன்னவரை அரசர் முதல் அமைச்சராக்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால், அவர் அரசரைப் போல அமெரிக்கரை எதிர்க்கவும் விரும்பாமல் விக்குகளைப் போல் அவர்கள் விடுதலையையும் ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை மீட்டும் ஆங்கிலப் பேரரசில் சேர்க்க விரும்பினதால் பணியேற்க முடியவில்லை. அதனோடு சின்னாட்களுக்குள் அவர் உயிர்நீத்தும் விட்டனர்.
அமெரிக்க விடுதலைப்போர் ஆங்கிலப் பேரரசை ஒருபுறம் ஓரளவு கலைப்பதாயிருந்தாலும் இன்னொருபுறம் அதனை வேறுபக்கம் திருப்பிப் புத்துயிர் தருவதாயிருந்தது. அமெரிக்க நிலத்தில் ஆங்கிலப்படைகள் தோற்றபின் இனிப்பேரரசின் கடல்கடந்த பகுதிகளை விடாதிருக்க வேண்டுமானால் கடலாற்றல் மிகுதியாக வேண்டுமென்றும் குடியேற்ற நாடுகளிடம் குறுகிய தன்னல மனப்பான்மையை முந்துறக் காட்டல் கூடாதென்றும் ஆங்கில மக்கள் உணர்ந்தனர். இவற்றின் பயனாக ஆங்கில நாட்டுக் கடற்படை வன்மைபெற விரிவுபடுத்தப்பட்டது. அமெரிக்கக் கூட்டுறவு நாட்டின்(United States of America) இழப்பிற் கீடாக விரைவில் அதன் வடக்கில் கானடா பிரிட்டிஷ் ஆட்சிக்குள் ஒன்றுபடுத்தப்பட்டது. இந்தியாவிலும் பிரிட்டிஷ் கை மேலோங்கிப் பிரிட்டிஷ் ஆட்சி விரிவுபடத் தொடங்கிற்று. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய குடியேற்ற நாடுகள் புதுவதாகத் தோன்றின. இவற்றுள் பிரிட்டன் மூன்றாம் ஜார்ஜின் கொள்கைகளை மீட்டும் பின்பற்றாது எச்சரிகையாக நடந்து கொண்டது.
ா