பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

345

பெருக்கி வந்த பிரிட்டன் 1914இல் போர் நிலையைப் பயன்படுத்திக் காப்பாட்சி நிறுவிற்று. பெயரளவில் ஓர் ஆட்சியாளரை ஏற்படுத்தி, அவர் பெயரால் எகிப்தில் ஆதிக்கம் செலுத்திற்று. அரசியல் வாழ்வில் இது தீச்சட்டியிலிருந்து தீயில் விழுந்ததாக அமைந்தது.

1919இல் எகிப்தின் தேசீய உணர்ச்சி காப்பாட்சியை எதிர்த்துத் தன்னாட்சிக் குரலெழுப்பிற்று.அதன் சின்னமாக 'வாப்த்' கட்சி என்ற தேசீயக் கட்சியும் அமைந்தது. சாத் பாஷா சாக்லுல் என்பவர் தலைமையில் அது செய்த போராட்டத்தின் விளைவாக, 1922இல் காப்பாட்சி முடிந்துவிட்டதாக. அறிவிக்கப்பட்டது. ஆட்சியாளர் பவூத் எகிப்தின் மன்னராகவே விளம்பரப்படுத்தப்பட்டார்.ஆனால் வாப்த் கட்சி இதில் பெயர் மாற்றம் தான் கண்டது. அவர்கள் தன்னுரிமைக் கூக்குரல் தொடர்ந்தது.

பிரிட்டனில் தொழிற் கட்சி ஆட்சி ஏற்றபோது நிலைமை மாறுமென்று எகிப்து போன்ற உரிமையற்ற நாடுகள் எண்ணின. ஆனால் பிரிட்டனில் உள்ள கட்சி வேறுபாடுகள் அதன் ஆதிக்க வகையில் கொள்கை வேறுபாடு கொள்ளாமல், தொனி வேறுபாடே காட்டின. 1924 இல் சாக்லுல் பாஷா பிரிட்டனின் முதுல் ராம்சே மாக்டனால்டுடன் பேச்சுக்கள் நிகழ்த்தினார். எகிப்திலிருந்து பிரிட்டிஷ் படைகளும் நிதி, நீதி அரங்க ஆலோசகர்களும் மீட்கப்பட வேண்டுமன்றும், எகிப்தின் ஆட்சியிலும் வெளி நாட்டுத் தொடர்பிலும் பிரிட்டன் தலையிடக் கூடாதென்றும், எகிப்தில் சிறுபான்மையினரையும் அயலாரையும் சூயஸ் கற்காலையும் பாதுகாக்கும் பொறுப்பைப் பிரிட்டன் விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும் சாக்லுல் பாஷாவின் ஐங்கவர்க் கோரிக்கைகள் வலியுறுத்தின.

சூயஸ் கடற்கால் முழு உலகக் கழகம் தனக்குத் தரப்பட்ட உரிமையை அதன் கால எல்லையாகிய 1968 கடந்தும் நீட்டிக்கும் படி 1909லேயே எகிப்தினிடம் கேட்டிருந்தது. எகிப்து இதனை ஏற்கவில்லை. இப்போது தன் சூயஸ் பாதுகாப்புரிமையை விட்டுக் கொடுப்பதானால்,அதன் ஆட்சியைச் சர்வதேச சங்கத்திடம் விடலாமென்றும் பிரிட்டன் சார்பில் ஆலோசனை கூறப்பட்டது. து உண்மையில் 1874இல் டார்பிக் கோமகனார் வறிய