(322
அப்பாத்துரையம் - 10
கழகத்தையும் திட்ட வேலையையும் மூடி விடவே அவர்கள் அரும்பாடுபட்டனர். இதற்காக அவர்கள் ஓயாது எகிப்திய சுல்தானைத் தூண்டிக் கொண்டும் வந்தனர்.
பாஷாவின் 1856ஆம் ஆண்டுப் பத்திரப்படி பேரளவில் எகிப்திய வேலையாட்கள் திட்ட வேலையில் ஈடுபட்டிருந்தனர். பாஷாவின் திட்டப்படி அவர்களுக்குக் கூலி தரப்பட்டாலும், வேலை கட்டாயப்படுத்தியே வாங்கப்பட்டது. இது மனிதப் பண்புக்கும் உலக நாகரிக முறைகளுக்கும் ஒவ்வாதது என்று பிரிட்டிஷார் கூக்குரலிட்டனர். இதைக் காரணமாகக் காட்டித் திட்டத்தை உடனடியாக நிறுத்தி விடும்படி கட்டளையிடச் சுல்தான் வற்புறுத்தப் பட்டு வந்தார். பிரஞ்சு அரசியல் இப்போக்கைக் கண்டித்தும் அது தடைபடவில்லை.
இதற்கிடையில் லெஸெப்ஸின் போதாக் காலமாக 1863ல் அவர் நண்பரான பாஷா சயீத் காலமானார். அடுத்த பாஷா இஸ்மாயிலும் துருக்கி வெளி நாட்டமைச்சர் நுபார் பாஷாவும் பிரிட்டிஷார் செல்வாக்குக்கு உள்ளாயினர். கட்டாய வேலை நிறுத்தப்பட்டது. திட்டம் இதனால் கலகலத்துவிட்டது. அதனுடன் கடற்கால் பகுதி நிலங்களுடன் அளிக்கப்பட்ட நன்னீர்க்கால் பகுதிகளையும் திருப்பிக் கொடுக்கும்படியும், வேலையை நிறுத்தி விடும்படியும் கழகத்திற்குப் புதிய பாஷாவின் அவசர ஆணை பிறந்தது.
ய
தலைமைப் பொறிவலாளர் வேலை நிறுத்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டார். இது ஒன்றே அச்சமயம் கழகத்தின் வாழ்வை உடனடி அழிவினின்று காத்தது ஆயினும் தலைமை நெருக்கடியாயிற்று. லெஸெப்ஸுக்கு இச்சமயம் ஒரே ஒரு போக்குத் தான் இருந்தது. அவர் பிரஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை அடுத்து, நடுநிலை வகித்து முடிவு காணும்படி வேண்டினார். இரு சார்பினரும் இதை ஏற்றபின்,அவர் நடுநிலைத் தீர்ப்பு வழங்கி இரு சார்பினருக்கும் ஓரளவு மன நிறைவு உண்டு பண்ணினார்.
மன்னன் நெப்போலியன் தீர்ப்பு 1864 ஜூலையில் வழங்கப் பட்டது. கட்டாய வேலையின் நிறுத்தம், பாசன நிலங்களைத் திருப்பிக் கொடுத்தல், நன்னீர்க்கால் பகுதியை விட்டுக் கொடுத்தல் அகிய பாஷாவின் மூன்று கோரிக்கைகளையும்