பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஐக்கிய நாடுகளின் அமைப்பு

227

பேச்சுகள் முறிவுற்ற இடத்தில் தடைமுறைகள் தொடங்குகின்றன. இதற்கு மன்றம், உறுப்பு நாடுகள் உதவியைக் கோரலாம்.அதற்காக அது, தனி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும். பொருளியல் நடவடிக்கைகளில் அது பொருளியல் மன்றத்தின் ஒத்துழைப்பையும் நாடலாம்.

பொறுப்பாட்சிப் பகுதிகளில் போர்த்துறை சார்ந்த முக்கியத்துவமுடையவை பாதுகாப்பு மன்றத்தின்

பொறுப்பிலேயே உள்ளன.

பாதுகாப்பு மன்றம் பேரவையுடன் ஒத்துழைத்துத் தனித்தனியாகக் கூடியே நடுநிலைத்தீர்ப்பு மன்ற நடுவரைத் தேர்ந்தெடுக்கின்றது. சட்டத்துறையில் பாதுகாப்பு மன்றம் நடுநிலைத்தீர்ப்பு மன்றத்தின் அறிவுரையை நாடும்.

பாதுகாப்பு மன்றத்தின் துணையுறுப்புக்களான குழுக்களுள் முக்கியமானவை: (1) படைத்துறையாளர் குழு, (2)அணுச்சத்திக்குழாம், (3) படைக்குறைப்புக் கட்டுப்பாட்டுக் குழாம், (4) நிலைக்குழுக்கள், (5) தற்காலிகச் சிறப்புக்குழுக்களும் குழாங்களும்.

இவற்றுள் படைத்துறையாளர் குழுவில் ஆதரவு வல்லரசுகளின் படைத்துறைப்பணி முதல்வர்கள் அல்லது அவர்கள் பேராட்கள் உறுப்பினர்களாவார்கள். படைத்துறைச் செய்திகளில் அவர்கள் அறிவுரை கூறுவதுடன் படை நட வடிக்கைகளில் மன்றத்தின் சார்பில் செயலாற்றுவார்கள். வேண்டும்போது படைத்துறைக்குழுவில் உறுப்பனிரல்லாதவரும் அதில் வந்து கலந்து கொள்ளும்படி அழைக்கப்படலாம். அவ்வவ்விடத்துத் திணைநிலத் துணைக்குழுக்களைக் கலந்து படைத்துறைக்குழு, படைத்துறைத் துணைநிலைத் திணைக்குழு அமைக்கலாம்.

அணுச்சத்திக் குழாம் பேரவையாலேயே அமர்வு பெறுவது. 1946இல் பேரவையால் அமைக்கப்பட்ட குழுவில் பாதுகாப்பு மன்ற உறுப்பினர் அனைவரும் உறுப்பினராயில்லாத போது கானடாவும் உறுப்பாயிற்று. இதற்குப் பல குழுக்களும் துணைக்குழுக்களும் உண்டு.