ஐக்கிய நாடுகளின் அமைப்பு
217
டிரிக்விலை. இவர் நார்வே நாட்டினர்; அந்நாட்டின் வெளி நாட்டமைச்சராய் போர்க்காலங்களில் அரும்பணியாற்றியவர்; நேச நாட்டினர் எல்லாருடனும் போர்க்காலத்திலேயே நன்கு பழகியவர்.
பொதுச்செயலாளர் ஒருவர்தான் ஐ.நா. அமைப்பில் மிகப் பெரும் பொறுப்பும் அமைப்பின் எல்லா உறுப்புகளுடன் தொடர்பும் உடைய தனிமனிதர். அவர் செல்வாக்கும் பதவியும் அவரைக் கிட்டத்தட்ட உலகின் ஒரு முடி சூடா மன்னராக்கப் போதியவை. உலகின் முதல் வல்லரசுகள்கூட அவர் விருப்பத்திற்குப் பெருமதிப்புக் கொடுத்தாக வேண்டும். ஆயினும், பண்டைக் காலப் பேரரசர் கனாக்கண்ட இந்த 'ஏழுலகாள் பதவியை' அவர் உலகப்பற்று, உலகத்தொண்டு காரணமாகப் பெற்ற ஓர் உலகக் குடியுரிமையாளரேயாவர் - உலகின் முடிசூடா மன்னர் பதவியில் அவர் உலகத் தொண்டராகவே பணி ஆற்றி வருகிறார்.
ஒரு நாட்டின் பல்துறைப் பொறுப்பையே ஒரு தனிமனிதன் கவனித்துக்கொள்வதரிது. பரந்த உலகின் பல்துறைப்பெருக்கம் வாய்ந்த பொறுப்பைப் பொதுச் செயலாளர் போதிய திறம்பட்ட உதவியின்றிச் செய்ய முடியாதென்பது எதிர்பார்க்கத்தக்கதே.
தனை முன்னிட்டே பொதுச்செயலாளரின் பாரித்தகன்ற செயற்பொறுப்புப் பரப்பை எட்டுத்துறைகளாக வகுத்து ஒவ்வொரு துறைக்கும் ஒரு துணைப்பொதுச் செயலாளர் அமர்த்தப்பெற்றுள்ளனர். இவர்களனைவரும் பொதுச் செயலாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கே பொறுப் புடையவராவர். இவ்வெட்டுத் துறைகளும் இவற்றில் பதவி வகிக்கும் துணைப்பொதுச் செயலாளர் பெயர்களும் கீழே தரப்படுகின்றன. அவரவர் பெயரின் எதிராகத் தரப்படுகின்ற அவரவர் தாய்நாட்டின் பெயரிலிருந்தே, அவர்கள் எத்தனை பல்வேறு நாடுகளிலிருந்து தேர்வு பெற்றுள்ளனர் என்பதையும், பெருநாடுகள், சிறுநாடுகள் எல்லாவற்றுக்கும் இதில் இடம் தரப்பட்டுள்ளது என்பதையும் காணலாம்.
(1) சமூகத்துறை துணைப்
பொதுச் செயலாளர்
பேராசிரியர் ஹென்றி
லாகியர் (ஃபிரான்ஸ்).