(186
அப்பாத்துரையம் - 10
பொறுப்புடைய அரசாங்க அமைப்பு, மாநாடு தொடங்குவதற்கு முன் போலந்துக்கு அமையவில்லையாதலால், அந்நாடு இடம் பெறவில்லை. ஆனால், மாநாடு முடிவு பெறுவதற்குள் ரஷ்யக் கூட்டுறவினால் தனியுரிமைப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயலோ ரஷ்யக் குடியரசையும், உக்ரேனியக் குடியரசையும், புதிதாக உரிமை ஆட்சி நிறுவிய டென்மார்க்கையும் மாநாடே தன் சொந்தப் பொறுப்பில் தனித்தனியாக அழைக்கத் தீர்மானித்து உறுப்பாகச் சேர்த்துக்கொண்டது.
முன்னேற்பாட்டு வேலைகள், மாநாடு தொடங்குவதற்கு நெடுநாள் முன்னரே தொடங்கப்பட்டுவிட்டன.டம்பார்ட்டன் ஓக்ஸ் திட்டம் நிறைவேறிய நாளிலிருந்து மாநாட்டுத் தொடக்கம் வரை அத்திட்டக் கோரிக்கைப் பத்திரம் பல உலக நாடுகளால் தனித்தனியாகவும் கூட்டாகவும், பல தனித்துறை நாட்டமைப்பு களாலும் சர்வதேச அமைப்புகளாலும் ஆராய்ந்து விவாதிக்கப் பட்டது.மாநாட்டின் பிரதிநிதிக் குழுக்கள் பலவும் இத்தகைய அமைப்புகள் பலவும் அதற்கான திருத்தக் கோரிக்கைகளை அனுப்பின. மொத்தம் 1200 திருத்தங்கள் வரை அனுப்பப் பட்டிருந்ததாக அறிகிறோம். பல திருத்தங்கள் திட்டத்தை உருவாக்கிய ஆதரவு வல்லரசுகளாலேயேகூட அனுப்பப் பெற்றிருந்தன. இவ்வெல்லாத் திருத்தங்களும், இவற்றிற்குரிய மூலத் திட்டமான ஐ.நா உரிமை விளம்பர மூலபாடமும், சட்டக் குழுவினரால் முன்னரே உருவாக்கித் தரப்பட்ட உலக நடுநிலைத்தீர்ப்பு மன்றத்தின் ஒழுங்குமுறைத் தொகுதியின் தற்காலிகப் பகர்ப்பு மூலம் ஆகிய இவையே மாநாட்டினால் முடிவான - உருப்பெறுவதற்காகக் காத்திருந்த பத்திரங்கள் ஆகும்.
மாநாட்டின் முதல் பொதுநிறை கூட்டம் 1945 ஏப்பிரல் 25- ஆம் நாள் தொடங்கிற்று. தொடக்கப் பேருரையை அமெரிக்கத் தலைவர் ட்ரூமன் வாஷிங்டனிலிருந்தே ஒலிபரப்பினார். இதனையடுத்து எட்டு நிறை கூட்டங்கள் நடைபெற்றன. கூடிய மட்டும் எல்லா உலக நாடுகளின் பிரதிநிதிக் குழுக்களும் கூட்டத்தில் நேரிடையாகக் கலந்து தம் கருத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்று கருதப்பட்டதனால், ஒருவர் பின் ஒருவராக, உறுப்பு நாடுகளின் பிரதிநிதிக் குழுத் தலைவர்கள் ஐ.நா. அமைப்புப்பற்றியும்; இயக்கம் பற்றியும்; அவற்றின் நோக்கம்,