பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனுடைய சாஸனங்கள்

14

அசோகன் நாலு வருஷம் இளவரசனாக அரசாட்சி 
அரசனின்
பட்டாபிஷேகம்

நடத்தியபின் தனக்குப் பட்டாபிஷேகம் செய்துகொண்டான். ‘பியதஸி முடிசூடிய இத்தனை வருஷங்களான பின்’ என்று பல சாஸனங்களில் அரசன் காலத்தில் நடந்த பல சம்பவங்களுக்குக் காலம் கூறப்பட்டிருக்கிறது. அதனால் அசோகன் கருத்துப்படித் தான் பட்டாபிஷேகம் செய்துகொண்ட தினமே தனது ஆட்சியின் ஆரம்பதினம் போலும். அத் தினத்தில் வருஷா வருஷம் உற்சவம் கொண்டாடப்பட்டது. அப்போது மரண தண்டனை விதிக்கப்பெற்ற குற்றவாளிகளில் சிலரை விடுதலைசெய்வது வழக்கம்.[1]


அசோகனுடைய ஜீவிய சரிதையில் கலிங்க யுத்தம்


கலிங்க யுத்தம்

மிக முக்கியமான சம்பவமாகும். அவனுடைய ஒன்பதாவது பட்டாபிஷேக வருஷத்தில் அரசன் கலிங்க தேசத்தைக் கைப்பற்றுவதற்காகப் படையெடுத்தான். தனது ஏகாதிபத்தியம் இமயமலை முதல் தெற்கே பாலாறு வரையும் இடைவிடாமல் தொடர்ந்திருப்பதற்குக் கலிங்கர் நாடு மட்டும் விலக்காயிருந்தது. இப் பிரதேசம் ஒரு மூலையிலிருந்ததினாலும் அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டிருந்ததினாலும் அது அசோகனின் முன்னோரால் ஏகாதிபத்தியத்தோடு சேர்க்கப்படவில்லை. இக் குறையைத் தீர்ப்பதற்கு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அசோகனுடைய எண்ணமும் கைகூடிற்று. ஆனால் அவன் மற்ற அரசரைப்போல் தனது வெற்றியில் சந்தோஷமடையவில்லை. யுத்தத்துக்கு இயற்கையான கொலையும் கொடுமையும் கஷ்டங்களும் அவன் மனத்தில் திகிலைச்

  1. ஐந்தாம் ஸ்தம்ப சாஸனம்.