.6 தாய்மை
அனைத்தும் சமயங்களின் பல்வேறு படிகள். மேலே கண்ட அடிப்படை உண்மை அனைத்தையும் கடந்தது. சமயங் க்ளோ அவற்றின் அடிப்படை உண்மைகளோ அன்றி அவற்றால் விளக்கப் பெறும் கொள்கை விளக்கங்களோ மக்கள் வாழ்வுக்கு அறநெறிக்கு-செம்மை வாழ்வுக்கு வழி காட்டிகளாக அமைந்து நிற்பன. இறைவன் அவற்றின் எல்லைகளுக்கு உள்ளிருந்து அருளுவதோடு அப்பாலுக் கப்பாய் அனைத்திலும் நீக்கமற என்றும் இருந்து எல்லா அண்டங்களையும் படைத்து, காத்து, கரந்து விளையாடும் நித்தியனாய் உள்ளவன் என்பதே நம் சமயம் கண்ட உண்மை. அத் தெய்வத்தின் அருள் நலம் பெற உலகின் எத்தனையோ சமயங்கள் எத்தனையோ வழிகாட்டிகளாக். அமைந்துள்ளன. நம் சமயம் அவற்றுள் தொன்மை வாய்ந்த சமயமாகி-எல்லாச் சமயங்களையும், அவற்றின் கோள்கையும் உள்ளடக்கி-யாதினும் வ ல் ல த ா கி த் துலங்கும் மெய்ச் சமயம் என்பதும் உண்மையாகும். அதனாலே இதன் அடிப்படையில் சமயக் காழ்ப்போ பிறமத தூஷணைகளோ இடம் பெறவில்லை. இந்த உயர்ந்த சமரசச் தெய்வநெறியாம் மெய்ச் சமயம் ைவ ய த் தி ல் உயிர்களை ஒம்பி என்றும் உயரும் என்பது உறுதி!