பக்கம்:தாய்மை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - தாய்மை

சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பேரால் - காட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்: என்ற பதிகத்தின் வழியே வாழ்வின் அடிப்படையான மூன்று உண்மைகளை நிலைநாட்டவே இக் காப்பியம் எழுந்தது என்ற மரபு நெறிப்படும் உண்மையை விளக்கி விட்டார் அவர். அதனாலன்றோ அந்நூல் இன்றும் என்றும் கற்போர் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மாய்த் தமிழருக்கு மட்டுமன்றிப் பிற மொழியாளருக்கும் சிறந்த இலக்கியமாகப் போற்றப்பெறுகின்றது. இதை ஒட்டிய மணிமேகலை அவ்வாறு சிறந்து போற்றப்பெறாமைக்குக் காரணம் அதன் ஆசிரியரேயாவர்; தம் சமய உண்மை யி ைன யும் அதன் வழியே கொல்லாமை, புலால் உண்ணாமை முதலிய கொள்கைகளையும் வலியுறுத்து வதனால் அதன் நிலை தளரவில்லை என்றாலும், பிற சமயத்தவரைப் பழித்துரைத்தமையே நிலை தளர்வதற்குக் காரண்மாயிற்று. இந்த மரபல்லா நெறி நின்ற பிற்கால இலக்கியங்கள் பலவும் இந்த வகையிலே சிதறுண்டன என்பது தேற்றம். எவ்வாறாயினும் தொல்காப்பியர் காலத்துக்கு முன் பன்னெடுங்காலந் தொட்டுக் கட்டிக் காத்து வந்த பாநல மரபினை ஒரளவு தளரா வகையில் பாதுகாத்த பெருமை அவற்றிற்கு உண் டு எனக் கொள்ளலாம். இசைப் பாடல்கள்

சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியத்தில் காணாத பல புது வகையான பாடல்களைக் காண்கின்றோம். அவற்றை வரிப் பாடல் எனவே குறித்துள்ளனர். கானல் வரி’, வேட்டுவ வரி” என்பனவும் குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் அவ்வகைப்பட்டனவே. தொல் காப்பியர் காலத்தில் காட்டப்பெற்ற பண்ணத்தி: என்னும் பாடல் வகை இடைக்காலத்தில் வளம் குன்றி இச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/158&oldid=684550" இலிருந்து மீள்விக்கப்பட்டது