பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367


தடுப்பு முதல் குடை வரை

கோடல் வெண்மை நிற இதழ்களை உடைய காந்தள். வெண்மைப் பெயரெனினும் இதழ்கள் வெண்மை நிறம் ஒன்றையே கொண்டவை அல்ல. பொதுவாகவே காந்தள் தன் ஓரிதழிலேயே ஒன்றிரண்டு மூன்று நிறங்களைக்கொண்டது. அவ்வண்ணங்கள் பூவின் வளர்ச்சியில் மாற்றம் பெறுவன. இந்நிற மாற்றமும் இதற்கு வண்ணக் கோலமாகின்றது. இக்கோலத்தால் காந்தள் புலவர் பெருமக்களது மனத்தைக் கவர்ந்து சுண்டி இழுத்துப் பல்வகையாக உவமை கூறிப் பாடவைத்துள்ளது. அத்துடன் இப்பூவை வண்ணித்த புலவர்களது கருத்து களில் ஒருமித்த பாங்கு அமைந்துள்ளதைக் காண்கின்றோம், வண் ணனையாகவோ உவமையாகவோ ஒரு புலவர் ஒன்றைப் படைத்து மொழிந்தால் அடுத்தவர் அதனை ஏற்று, எடுத்து மொழிந்துள்ளார். இவ்வாறு படைத்தும் எடுத்தும் மொழிந் துள்ளமை அங்கொன்று இங்கொன்றாக அன்றிப் பரவலாகவே இலக்கியங்களில் அமைந்துள்ளன. இவற்றைக் கால வாரியாக அன்றி இலக்கியப் பாங்கில் நோக்குவோம். கண்ணன்சேந்தனார் என்னும் புலவர் அரும்புடன் நீண்டிருக்கும் காம்புத் தண்டைக் காண்கின்றார். மற்ற மலர் களின் காம்பைவிட இக்காம்பு அதிக அளவில் நீண்டது. முனை யில் அரும்பைத் தாங்கிநிற்கும் தோற்றம் படகைத் தள்ளும் துடுப்பு போன்று இருந்தது. அதனால் 'நீடிதழ் நெடுந் துடுப்பு' எனப்பட்டது. 'தண்கமழ் கோடல் துடுப்பு ஈன” -என்று காம்பு நீண்டுவளர்வதைத் துடுப்பு ஈன” என்றார். இத்துடுப்பு அரும் போடு பக்கவாட்டில் கைநீட்டியது போன்று எடுப்பாக இருப்பதைக் மூவாதியர் என்பார், "தண்ணறுங் கோடல் துடுப்பு எடுப்ப" -என்றார், 1 அகம் : 78 : 9. 2 திணை, ஐ : 21. $ ஐந்: ன: 17,