பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/35

RUPA MANGALA R (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:10, 17 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (மெய்ப்பு பார்க்கப்படாதவை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலில் நிறுவப்பட்டுள்ளவை.

பண்டைத் தமிழகத்தில் மலர்க்கலைக் கல்வி இருந்தது. - பண்டைத் தமிழ்ச் சான்றோர் செடிம (செடி அறிவியல்) அறிவுடையோர். சங்கப் பாடல்களில் மலர்பற்றிய கருத்துகள் தற் காலச் செடிம ஆய்விற்கு இயைபும், வளர்ச்சிக்குத் துணையும் ஆகும். மலர்களால் வாழ்வியல் மரபுகள் மலர்ந்தன. பூ என்பது பொதுப்பெயர். பூவின் தன்மை 10 - பருவம் 7 - உறுப்பு 7 - இதழ்ப் பெயர் 7 - கொத்துப் பெயர் 7 - மலர் அணி வகை 26. முல்லை தமிழர் வாழ்வியல் மலர். முல்லை நிலத்தவர் மரபுகள் பல மரபுகளுக்கு முதன்மையானவை. வாழ்த்துக் கலவையாக முல்லையும் நெல்லும் கெர்ள்ளப்பட்டன. ஆம்பல்-தாமரை-நீர்த் தொடர்பின் கரணியப் பெயர். குறிஞ்சி தமிழ் நிலப் பூ. கோயிற் பூசெய்க்குரியார் குயவர். ஆர் என்பது காட்டாத்தி. வலப்பக்கத்துக்குருத்தே பனம்பூவாகச் சூடப்பட்டது. வெட்சி விருச்சி அன்று - வள்கை இரண்டு வகை - காந்தள், தோன்றி, கோடல் ஒருமைப்பாடு, வேறுபாடு - உந்துாழ் என்பதே உரிய சொல் - கலிமா, வடுமரம், தேமா, கனிமரம். பஞ்சணைக்குரிய இலவம் முற்காலத்தது. அனிச்சம் மரம் குழையும் முறை. வண்டுண்ணா மலர் இல்லை. பூக்காது காய்ப்பதில்லை. முருங்கை தமிழ்ச் சொல். - த்மிழ்ச்சொல் ஆய்வால் பல கருத்துச் சிக்கல்களைத் தீர்க்கலாம். - உலக மரபுகளில் தமிழ் மரபுகள் முந்தியவையும், பகுத்தறிவிற்கு ஒத்தவையும், இன்றியமையாத கரணியங்கள் கொண்டவையும், பண்பாட்டின் அடிப் படையில் எழுந்தவையும் ஆகும்.