A
A (ஏ) என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் முதலாவது எழுத்தும் முதலாவது உயிரெழுத்தும் ஆகும்.[1] இது பண்டைய கிரேக்க எழுத்தான அல்பாவிலிருந்து பெறப்பட்ட எழுத்தாகும்.[2]
மொழிகளில்
தொகுஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (eஇற்கும் tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும்.[3] ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம் ஆகிய மொழிகளின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.[4] ஆங்கில மூலத்தையுடைய சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.[5]
கணிதத்திலும் அறிவியலிலும்
தொகுவடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.[6] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் A பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் a சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.[7]
இயற்பியலில், அம்பியருக்கான அனைத்துலக முறை அலகுக் குறியீடு A ஆகும்.[8]
வேதியியலில், வலுவளவு ஓட்டு எதிர்மின்னிச் சோடித் தள்ளுகைக் கொள்கையில் மைய அணுவானது Aஆல் குறிப்பிடப்படும்.[9]
தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்
தொகு- Α α : கிரேக்க எழுத்து அல்பா.
- А а : சிரில்லிய எழுத்து A.
- Ɑ ɑ : இலத்தீன் எழுத்து அல்பா.
- ɐ : சிற்றெழுத்து aஇன் தலைகீழ் வடிவம்.
- ∀ : பேரெழுத்து Aஇன் தலைகீழ் வடிவம், ஏரணத்தில் "எல்லாவற்றுக்கும்" என்பதைக் குறிக்கப் பயன்படும்.[10]
- ª : ஒரு வரிசைக் காட்டி.
- Æ æ : இலத்தீன் கூட்டெழுத்து AE.
- Å å : பல்வேறு எசுக்காண்டினாவிய மொழிகளில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து.
மேற்கோள்கள்
தொகு- ↑ Simpson, J. A. & Weiner, E. S. C. (1989). The Oxford English Dictionary. Oxford, UK: Oxford University Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-861213-3.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Kyle, McCarter P. (செப்டம்பர் 1974). "The Early Diffusion of the Alphabet". The Biblical Archaeologist 37 (3): 54-56.
- ↑ "English Letter Frequency (based on a sample of 40,000 words)". Cornell University. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.
- ↑ "Percentages of Letter Frequencies per 1000 Words". Trinity College. Archived from the original on 2007-01-25. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Gelb, I. J. & Whiting, R. M. (1998). "A". Academic American Encyclopedia (1). Ed. In Ranson & K. Anne. Danbury, CT: Grolier Incorporated. 45.
- ↑ Diringer, David (2000). "A". Encyclopedia Americana (1). Ed. In Bayer, Patricia. Danbury, CT: Grolier Incorporated. 1.
- ↑ Hall-Quest, Olga Wilbourne (1997). "A". Collier's Encyclopedia (1). Ed. In Johnston, Bernard. New York, NY: P. F. Collier. 1.
- ↑ க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12. தேசிய கல்வி நிறுவகம். 2013. p. 4.
- ↑ "Valence Shell Electron Pair Repulsion Theory". Meta-synthesis. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.
- ↑ "Mathematical Symbols". RapidTables. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.