1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
1988 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது அதிகாரபூர்வமாக XXIV ஒலிம்பியாட் (ஒலிம்பிக் விளையாட்டுகள்) என அழைக்கப்படுகிறது. தென் கொரிய தலைநகர் சியோலில் செப்தெம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இப்போட்டிகள் நடைபெற்றன. இது ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது கோடைகால ஒலிம்பிக் ஆகும். முதல் ஒலிம்பிக் 1964ம் ஆண்டு டோக்கியோவில் நடந்தது. இலையுதிர் காலத்தில் நடைபெறும் நான்காவது ஒலிம்பிக் இதுவாகும். இப்போட்டியில் 159 நாடுகள் பங்கு கொண்டன. அவற்றிலிருந்து மொத்தமாக 8391 போட்டியாளர்கள் (6197 ஆண்கள் 2194 பெண்கள்) பங்கெடுத்தனர். இப்போட்டியில் 263 நிகழ்வுகள் நடைபெற்றன.
கோடைக்கால ஒலிம்பிக் சின்னம் | |
நடத்தும் நகரம் | சியோல், தென் கொரியா |
---|---|
குறிக்கோள் | இணக்கமும் முன்னேற்றமும் (화합과 전진) |
பங்குபெறும் நாடுகள் | 160 |
வீரர்கள் | 8,453 (6,250 ஆண்கள், 2,203 பெண்கள்) |
நிகழ்ச்சிகள் | 23 விளையாட்டுகளில் 237 நிகழ்வுகள் (31 துறைகள்) |
துவக்கம் | 17 செப்டம்பர் 1988 |
நிறைவு | 2 அகடோபர் 1988 |
திறந்து வைத்தவர் | |
தீச்சுடர் ஏற்றியோர் | |
அரங்கு | ஜம்சல் ஒலிம்பிக் விளையாட்டரங்கம் |
கோடைக்காலம்
1988 Summer Paralympics |
வட கொரியாவும் அதன் நட்பு நாடுகளான கியுபா, எத்தியோப்பியா ஆகியவை ஆகியவை இப்போட்டியைப் புறக்கணித்தன[3]. பல்வேறு காரணங்களால் அல்பேனியா, மடகாஸ்கர் சீசெல்சு, நிகரகுவா ஆகியவை இப்போட்டியைப் புறக்கணித்தன [4]. இப்போட்டியில் முதல் இரு இடங்களைப் பிடித்த சோவியத் ஒன்றியத்துக்கும் கிழக்கு செருமனிக்கும் இது கடைசிப் போட்டியாக அமைந்தது.
போட்டி நடத்தும் நாடு தெரிவு
தொகுசப்பானும் தென் கொரியாவும் மட்டுமே போட்டியிட்டன. செப்தெம்பர் 30, 1981ம் ஆண்டு மேற்கு செருமனியில் நடந்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 84வது அமர்வில் சியோல் 1988ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த தேர்வு பெற்றது.
1988 ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[7] | ||||||
---|---|---|---|---|---|---|
நகரம் | நாடு | சுற்று 1 | ||||
சியோல் | தென் கொரியா | 52 | ||||
நகோயா | சப்பான் | 27 |
சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
தொகு- வரலாற்றில் முதன்முறையாக அழகுபடுத்தப்பட்ட குதிரையேற்ற ஒழுங்கில் அனைத்து நிகழ்வுகளிலும் பெண்கள் வென்றனர்.[8]
- 64 ஆண்டுகளுக்கு பின் டென்னிசு ஒலிம்பிக்கில் இடம் பிடித்தது.[9] ஸ்டெப்பி கிராப் அர்ஜெண்தினாவின் கேப்ரில்லா சபாட்டினியை வென்று தங்கம் பெற்றார். அவ்வாண்டு யூ.எஸ் ஓப்பனில் இறுதி ஆட்டத்தில் சபாட்டினியை வென்றதுடன் அனைத்து பெருவெற்றித் தொடர் ��ோட்டிகளிலும் ஸ்டெப்பி கிராப் வென்றார்.[10][11]
- மேசைப்பந்தாட்டம் ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு சீனாவும் தென் கொரியாவும் தலா இரு தங்கங்களை வென்றன.[12]
- போதை மருந்து சோதனையில் தேறாததால் இரண்டு பல்கேரிய எடைதூக்குபவர்களின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் அந்நாடு எடைதூக்குபவர்கள் அணியை முழுவதுமாக இப்போட்டியில் இருந்து விலக்கிக்கொண்டது.[13]
- நியூசிலாந்தைச் சேர்ந்த நடுவர் தென்கொரிய குத்துச்சண்டை வீரரை எச்சரித்ததால் தென் கொரிய குத்துச்சண்டை அதிகாரிகளும் பாதுகாப்பு வீரர்களும் தாக்கினர்.
- அமெரிக்க வீரருக்குப் பதிலாக தென் கொரிய வீரரை வென்றதாக நடுவர்கள் அறிவித்து தங்க பதக்கம் அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.[14]
- 100 மீ விரைவுஓட்டத்தில் உலக சாதனை புரிந்த கனடாவின் சான்சன் போதை மருந்து சோதனையில் தேறாததால் அவரின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.[15][16]
- பெண்கள் பிரிவில் வில்வித்தையில் வெள்ளி வென்றதே இந்தோனேசியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.
- பறக்க விடப்பட்ட அமைதிப் புறாக்களில் பல ஒலிம்பிக் தீச்சுடர் எரிந்த மேடையின் வெப்பத்தால் கருகி செத்தன. இதனால் 1996 ஒலிம்பிக்கில் காகித புறாக்களே பறக்கவிடப்பட்டன.[17]
1988 கோடைகால ஒலிம்பிக் புறக்கணிப்பு
தொகு1988 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது 1984 கோடைகால ஒலிம்பிக்கை புறக்கணித்த சோவியத் ஒன்றியமும் அதன் நட்பு நாடுகளும் இப்போட்டியையும் புறக்கணிக்குமோ என்ற அச்சம் எழுந்தது. பொதுவுடைமை நாடுகளுடன் தென் கொரியாவுக்கு தூதரக உறவு இல்லாதது இச்சிக்கலை அதிகப்படுத்தியது. அதனால் ஒலிம்பிக் போட்டியில் புறக்கணிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு முழுவதும் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையத்தின் மீது விழுந்தது. சோவியத் ஒன்றியம் இப்போட்டியில் பங்கேற்பதாக உறுதி கூறியது. 1984ம் ஆண்டு போட்டியை புறக்கணித்த கிழக்கு செருமனி இப்போட்டியில் பங்கேற்பதாக கூறியது.
கியுபாவின் பிடல் காஸ்ட்ரோ வட கொரியாவும் இப்போட்டியை இணைந்து நடத்தவேண்டும் என்றார். அதன் காரணமாக 1986 சனவரி 8, 9 ல் சுவிட்சர்லாந்தில் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகத்தின் தலைவர் வட கொரியாவின் ஒலிம்பிக் ஆணையகத்தையும் தென் கொரியாவின் ஒலிம்பிக் ஆணையகத்தையும் கொண்டு கூட்டம் கூட்டினார். வட கொரியா 23 போட்டிகளை தான் நடத்த அனுமதி கோரியது. இரண்டு கொரியாக்களும் இணைந்த ஐக்கிய அணியையும், தொடக்க, இறுதி விழாக்களை இணைந்து நடத்தவும் கோரியது. பல கூட்டங்கள் நடந்தும் இணக்கம் ஏற்படவில்லை. பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகம் வட கொரியா ஐந்து போட்டிகள் நடத்தலாம் என்றும் தொடக்க அல்லது இறுதி விழாக்களை தென் கொரியா மட்டுமே நடத்தும் என்று தெரிவித்தது. அதை வட கொரியா ஏற்கவில்லை.[18] இதனால் 1988 ஒலிம்பிக் போட்டியை தென் கொரியா மட்டுமே ஏற்று நடத்தியது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வட கொரியா 1988 ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்தது. அதற்கு ஆதரவாக கியுபாவும் எதியோப்பியாவும் இப்போட்டியை புறக்கணித்தன. அல்பேனியா, நிக்கராகுவா, சீசெல்சு ஆகியவையும் இப்போட்டியை புறக்கணித்தன [19]. மடகாசுகர் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பின் வட கொரியாவுடன் இணைந்து இப்போட்டியை புறக்கணித்தது.[20]
பதக்கப் பட்டியல்
தொகுபங்குகொண்டவைகளில் 52 நாடுகள் பதக்கம் பெற்றன'
போட்டியை நடத்தும் நாடு
முதன்முறையாக தங்கம் வென்ற நாடு
முதன்முறை பதக்கம் வென்ற நாடு
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சோவியத் ஒன்றியம் | 55 | 31 | 46 | 132 |
2 | கிழக்கு ஜேர்மனி | 37 | 35 | 30 | 102 |
3 | ஐக்கிய அமெரிக்கா | 36 | 31 | 27 | 94 |
4 | தென் கொரியா | 12 | 10 | 11 | 33 |
5 | மேற்கு செருமனி | 11 | 14 | 15 | 40 |
6 | அங்கேரி | 11 | 6 | 6 | 23 |
7 | பல்கேரியா | 10 | 12 | 13 | 35 |
8 | உருமேனியா | 7 | 11 | 6 | 24 |
9 | பிரான்சு | 6 | 4 | 6 | 16 |
10 | இத்தாலி | 6 | 4 | 4 | 14 |
11 | சீனா | 5 | 11 | 12 | 28 |
12 | ஐக்கிய இராச்சியம் | 5 | 10 | 9 | 24 |
13 | கென்யா | 5 | 2 | 2 | 9 |
14 | சப்பான் | 4 | 3 | 7 | 14 |
15 | ஆத்திரேலியா | 3 | 6 | 5 | 14 |
16 | யுகோசுலாவியா | 3 | 4 | 5 | 12 |
17 | செக்கோசிலோவாக்கியா | 3 | 3 | 2 | 8 |
18 | நியூசிலாந்து | 3 | 2 | 8 | 13 |
19 | கனடா | 3 | 2 | 5 | 10 |
20 | போலந்து | 2 | 5 | 9 | 16 |
21 | நோர்வே | 2 | 3 | 0 | 5 |
22 | நெதர்லாந்து | 2 | 2 | 5 | 9 |
23 | டென்மார்க் | 2 | 1 | 1 | 4 |
24 | பிரேசில் | 1 | 2 | 3 | 6 |
25 | பின்லாந்து | 1 | 1 | 2 | 4 |
எசுப்பானியா | 1 | 1 | 2 | 4 | |
27 | துருக்கி | 1 | 1 | 0 | 2 |
28 | மொரோக்கோ | 1 | 0 | 2 | 3 |
29 | ஆஸ்திரியா | 1 | 0 | 0 | 1 |
போர்த்துகல் | 1 | 0 | 0 | 1 | |
சுரிநாம் | 1 | 0 | 0 | 1 | |
32 | சுவீடன் | 0 | 4 | 7 | 11 |
33 | சுவிட்சர்லாந்து | 0 | 2 | 2 | 4 |
34 | ஜமேக்கா | 0 | 2 | 0 | 2 |
35 | அர்கெந்தீனா | 0 | 1 | 1 | 2 |
36 | சிலி | 0 | 1 | 0 | 1 |
கோஸ்ட்டா ரிக்கா | 0 | 1 | 0 | 1 | |
இந்தோனேசியா | 0 | 1 | 0 | 1 | |
ஈரான் | 0 | 1 | 0 | 1 | |
நெதர்லாந்து அண்டிலிசு | 0 | 1 | 0 | 1 | |
பெரு | 0 | 1 | 0 | 1 | |
செனிகல் | 0 | 1 | 0 | 1 | |
அமெரிக்க கன்னித் தீவுகள் | 0 | 1 | 0 | 1 | |
44 | பெல்ஜியம் | 0 | 0 | 2 | 2 |
மெக்சிக்கோ | 0 | 0 | 2 | 2 | |
46 | கொலம்பியா | 0 | 0 | 1 | 1 |
சீபூத்தீ | 0 | 0 | 1 | 1 | |
கிரேக்க நாடு | 0 | 0 | 1 | 1 | |
மங்கோலியா | 0 | 0 | 1 | 1 | |
பாக்கித்தான் | 0 | 0 | 1 | 1 | |
பிலிப்பீன்சு | 0 | 0 | 1 | 1 | |
தாய்லாந்து | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் | 241 | 234 | 264 | 739 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 International Olympic Committee(9 October 2014). "Factsheet – Opening Ceremony of the Games of the Olympiad". செய்திக் குறிப்பு.
- ↑ "Seoul 1988 Torch Relay". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2 June 2018.
- ↑ http://www.topendsports.com/events/summer/boycotts.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-27. பார்க்கப்பட்ட நாள் 2014-02-25.
- ↑ "Seoul 1988". olympic.org. Archived from the original on 23 மார்ச்சு 2010. பார்க்கப்பட்ட நாள் 12 March 2010.
- ↑ "IOC Vote History". Archived from the original on 2008-05-25. பார்க்கப்பட்ட நாள் 2014-02-25.
- ↑ "Past Olympic host city election results". GamesBids. Archived from the original on 17 மார்ச்சு 2011. பார்க்கப்பட்ட நாள் 17 March 2011.
- ↑ "Canada at the 1988 Summer Olympics". sportsofworld.com. Archived from the original on 13 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 6 October 2007.
- ↑ Alfano, Peter (2 October 1988). "The Seoul Olympics: Tennis; Tennis Returns to Good Reviews". www.nytimes.com. http://query.nytimes.com/gst/fullpage.html?res=940DEEDA1638F931A35753C1A96E948260. பார்த்த நாள்: 6 October 2007.
- ↑ "Steffi graf, la mejor". elTenis.net (in Spanish). Archived from the original on 7 August 2008. பார்க்கப்பட்ட நாள் 6 October 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Gabriela Sabatini – Fotos, Vídeos, Biografía, Wallpapers y Ficha Técnica". idolosdeportivos.com (in Spanish). Archived from the original on 18 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 6 October 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Olympic Table Tennis Champions". usatt.org. Archived from the original on 20 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 6 October 2007.
- ↑ "The Seoul Olympics: Weight Lifting; Team Lifted After 2d Drug Test Is Failed". www.nytimes.com. 24 September 1988. http://query.nytimes.com/gst/fullpage.html?res=940DE5D81739F937A1575AC0A96E948260&sec=&spon=&pagewanted=print. பார்த்த நாள்: 6 October 2007.
- ↑ "Seoul Games scarred by riots". in.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 22 August 2008.
- ↑ Pitel, Laura (23 September 2003). "A Look at André Jackson, the Mystery Man (and friend of Carl Lewis) in the Drug testing area with Ben Johnson in Seoul". The Times Online (UK) (London). http://www.timesonline.co.uk/tol/sport/more_sport/athletics/article1161912.ece. பார்த்த நாள்: 23 September 2003.
- ↑ "Ben Johnson acusa a EEUU de proteger a sus atletas dopados". www.elmundo.es (in Spanish). பார்க்கப்பட்ட நாள் 6 October 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "When messengers of peace were burned alive". Archived from the original on 2004-08-29. பார்க்கப்பட்ட நாள் 2014-02-26., Deccan Herald, 12 August 2004. Retrieved 25 June 2008.
- ↑ http://articles.philly.com/1988-01-16/sports/26283951_1_seoul-officials-ioc-north-korea
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-28. பார்க்கப்பட்ட நாள் 2014-02-27.
- ↑ de:Olympische Sommerspiele 1988#Sportpolitik