1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து

1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து (1933 Imperial Airways Diksmuide crash) எனும் இந்த அபாயகரமான, மற்றும் நாசவேலைக் காரணமாக சந்தேகிக்கப்படும் இவ்வானூர்தி விபத்து, 1933-ம், ஆண்டு, மார்ச்சு 28, அன்று, நடந்தது. இந்த விபத்தில் சிக்கிய "ஆம்ஸ்ட்ராங் வித்வொர்த் அர்கோசி" லிவர்பூல் மாநகரம் (Armstrong Whitworth Argosy (City of Liverpool) வகையை சார்ந்த இவ்வானூர்தி, 'பிரித்தானிய விமான நிறுவனமான' "இம்பீரியல் ஏயர்வேசு" மூலம் இயங்கிவந்ததாகும்.[1] வடக்கு பெல்ஜியத்தின் 'டிக்ஸ்முய்டி' அல்லது 'டிக்ஸ்முடி' (Diksmuide or (Dixmude) எனும் பகுதியின் அருகே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில், வானூர்தியில் பயணித்த அனைவருமே (15-பேர்கள்) கொல்லப்பட்டனர். அந்நேரத்தில் இந்நிகழ்வை, பிரித்தானிய வானூர்தி வரலாற்றில் இறப்புகளை ஏற்படுத்திய விபத்தாக பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்விபத்து, எப்போதாவது நடக்கும் நாசவேலை விபத்துக்களில் இதுவே முதல் வானூர்தி விபத்து என்று கூறப்பட்டு வருகிறது.[2]

லிவர்பூல் மாநகரம்
City of Liverpool
ஆம்ஸ்ட்ராங் வித்வொர்த் அர்கோசி, (1926 ஆம் ஆண்டு இம்பீரியல் ஏயர்வேசு போன்ற ஒரு அர்கோசி வானூர்தி)
விபத்து சுருக்கம்
நாள்1933, மார்ச்சு 28
சுருக்கம்தீ, சந்தேகத்திற்குரிய நாசவேலை
இடம்டிக்ஸ்முய்டி அருகில்,  பெல்ஜியம்
பயணிகள்12
ஊழியர்3
உயிரிழப்புகள்15 (அனைவரும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஆம்ஸ்ட்ராங் வித்வொர்த் அர்கோசி II
வானூர்தி பெயர்லிவர்பூல் மாநகரம்
இயக்கம்இம்பீரியல் ஏயர்வேசு
வானூர்தி பதிவுG-AACI
பறப்பு புறப்பாடுபிரசெல்சு வானூர்தி நிலையம்
சேருமிடம்கிராய்டன் வானூர்தி தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). 1996–2016. பார்க்கப்பட்ட நாள் 2016-04-08.
  2. Denham, Terry (1996). World Directory of Airliner Crashes. Yeoford: Patrick Stephens Ltd. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85260-554-5.