வி. பி. கணேசன்

வி. பி. கணேசன் (V. P. Ganesan, இறப்பு: 2 ஆகத்து 1996)[1] என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன் இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (ஜ. தொ. க) என்ற மலையகத் தொழிற்சங்கத்தின் நிறுவனரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குநரும் ஆவார். தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்.

வி. பி. கணேசன்

இயற் பெயர் வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன்
தொழில் நடிகர், இயக்குநர், தொழிற்சங்கவாதி
நடிப்புக் காலம் 1970கள்
துணைவர் டயனா ரூத் தவமணி (இ. 2014)
பிள்ளைகள் மனோ கணேசன், பிரபா கணேசன்
குறிப்பிடத்தக்க படங்கள் புதிய காற்று
நான் உங்கள் தோழன்

இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "புதிய காற்று", "நான் உங்கள் தோழன்" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன.[1] மூன்றாவது படமான 'நாடு போற்ற வாழ்க" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் சிங்களத் திரைப்படமாகவும் உருவாகியது. அரசியல்வாதிகள் பிரபா கணேசன், மனோ கணேசன் ஆகியோர் இவருடைய பிள்ளைகளாவார்.

வி. பி. கணேசனின் வாழ்க்கை வரலாற்றை "சிகரம் தொட்ட செம்மல் வி.பி.கணேசன் என்ற பெயரில் எழுத்தாளர் மொழிவாணன் எழுதி வெளியிட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 அந்தனி ஜீவா (10 மே 2015). "சொல்லத்தான் நினைக்கிறேன்". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 10 மே 2015.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._கணேசன்&oldid=4169164" இலிருந்து மீள்விக்கப்பட்டது