வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது ஆரணி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. இதன் தொகுதி எண் 69. போளூர், ஆரணி, உத்திரமேரூர், செய்யாறு, செஞ்சி, திண்டிவனம், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
வந்தவாசி (தனி) | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மக்களவைத் தொகுதி | ஆரணி |
நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
மொத்த வாக்காளர்கள் | 2,32,554[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதி கலைக்கப்பட்டதுடன், அந்தத் தொகுதியில் இருந்த கிராமங்கள் வந்தவாசி, போளூர், ஆரணி சட்டமன்ற தொகுதிகளில் சேர்க்கப்பட்டன. வந்தவாசி தொகுதியில் வந்தவாசி நகராட்சி, வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம், தேசூர் மற்றும் பெரணமல்லூர் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.
வந்தவாசி தொகுதியைப் பொறுத்த வரைவில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பெருமளவில் உள்ளனர். முதலியார்கள், முஸ்லிம்கள், ஜைனர்கள், நாயுடு, ரெட்டியார் மற்றும் இதர இனத்தவர்களும் உள்ளனர்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2,39,760 பேர், ஆண்கள் 1,18,230 பேர், பெண்கள் 1,21,439 பேர், மூன்றாம் பாலித்தனவர்கள் 1. அதிமுக கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் எஸ். முரளிசங்கர், திமுக சார்பில் எஸ். அம்பேத்குமார், மக்கள் நீதி ம��்யம் சார்பில் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாவதி, அமமுக சார்பில் பி. வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- வந்தவாசி வட்டம் (பகுதி)
சோழவரம், நம்பேடு, ஆணைபோகி, விளாநல்லூர், ஆயிலபாடி, கீழ்கொவளைவேடு, சேத்துப்பட்டு, தெள்ளூர், புலிவாய், தென்னாங்கூர், காரம், கொசப்பட்டு, ஒழப்பாக்கம், ஆரியாத்தூர், விளாங்காடு, இரும்பேடு, கொவளை, கீழ்நர்மா, கீழ்ப்பாக்கம், சாத்தனூர், கோயில்குப்பம், வழூர், விழுதுப்பட்டு, தழுதாழை, சளுக்கை, தாழம்பள்ளம், வெங்குணம், மும்முணி, காரணை, தென்சேந்தமங்கலம், எறும்பூர், தென் ஆளப்பிறந்தான், மேல்செம்பேடு, ஊர்குடி, வல்லம், வடுகமங்கலம், செப்டாங்குளம், அரியப்பாடி, இஞ்சிமேடு, சந்திரம்பாடி, கட்டமங்கலம், மோசவாடி, தாடி நொளம்பை, கோதண்டபுரம், தென்கரை, வடவணக்கம்பாடி, மேல்பாதி, தக்கண்டராயபுரம், அரசூர், மாம்பட்டு, கீழ்சாத்தமங்கலம், பாதிரி, சொன்னாவரம், பிருதூர், மங்கநல்லூர், அகரம், மேல்கொடுங்கலூர், கீழ்கொடுங்கலூர், காவேடு, உளுந்தை, சாலவேடு, மங்கலம், மாமண்டுர், மருதாடு, கொடநல்லூர், சேதாரக்குப்பம், செம்பூர், இளங்காடு, ஆவனவாடி, வங்காரம், கிழ்வெள்ளியூர், கடம்பை, மழையூர், ஏந்தல், மாணிக்கமங்கலம், ரெட்டிக்குப்பம், ரகுநாதசமுத்திரம், கோழிப்புலியூர், கல்யாணபுரம், ஆளியூர், சோலையருகாவூர், செங்கம்பூண்டி, கண்டவரட்டி, கூத்தம்பட்டு, பொன்னூர், நல்லேரி, ஜம்மம்பட்டு, நடுக்குப்பம், ஏரிப்பட்டு, அத்திப்பாக்கம், நாவல்பாக்கம், கீழ்வில்லிவளம், மழுவங்கரணை, புன்னை, கொட்டை, வெளியம்பாக்கம், கீழ்சீசமங்கலம், கருடாபுரம், சீயலம், அம்மணம்பாக்கம், பாதூர், அதியனூர், அதியங்குப்பம், ஓசூர், நெல்லியங்குளம், ஸ்ரீரங்கராஜபுரம், கண்டியநல்லூர், ராமசமுத்திரம், சோகத்தூர், ஏம்பலம், தென்வணக்கம்பாடி, ஜப்திகாரணை, சொரப்புத்தூர், கீழ்புத்தூர், திரக்கோயில்,தேத்துரை, சாத்தான்பூண்டி, பெருங்கடபுத்தூர், அரியம்பூண்டி, மடம், இசாகொளத்தூர், கோட்டுப்பாக்கம், மேலச்சேரி, நல்லடிசேனை, தென்னாத்தூர், சீயமங்கலம், தென் தின்னலூர், சீவனம், பாப்பநல்லூர், தெள்ளார், மீசநல்லூர், ஏரமலூர், மூடூர், காவணியாத்தூர், கல்பட்டுநைனான்குப்பம், ஏய்ப்பாக்கம், வெண்மந்தை, கீழ்செம்மேடு, அமுடுர், பாதூர், தெய்யார், கொடியாலம், கூடலூர், கூத்தவேடு, அகரகோரகோட்டை, கூனம்பாடி, பாஞ்சரை, ஆச்சமங்கலம், சித்தருகாவூர், கீழ்ங்குணம், கெங்கம்பூண்டி, அருந்தோடு, வயலூர், பூங்குணம், வடக்குப்பட்டு, மகமாயி திருமணி, வெடாஅல், குண்ணகம்பூண்டி, நெற்குணம், கீழ்நமண்டி, கோரக்கோட்டை, சேணல், பெண்ணாட்டகரம், இரும்பிலி, பழவேரி, சு.காட்டேரி, அருங்குணம், மாவலவாடி, t.தாங்கல் மற்றும் சத்தியவாடி கிராமங்கள்.
பெரணமல்லூர் (பேரூராட்சி), வந்தவாசி (நகராட்சி) மற்றும் தேசூர் (பேரூராட்சி)[3]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | சோமசுந்தர கவுண்டர் | பொது நல கட்சி | 41975 | 31.02 | இராமானுச ரெட்டியார் | காங்கிரசு | 29962 | 22.14 |
1957 | எம். இராமசந்திர ரெட்டி | காங்கிரசு | 44610 | 28.13 | டி. தசரதன் | காங்கிரசு | 22187 | 13.99 |
1962 | எசு.முத்துலிங்கம் | திமுக | 34922 | 64.57 | டி. தசரதன் | காங்கிரசு | 19160 | 35.43 |
1967 | முத்துலிங்கம் | திமுக | 38626 | 61.25 | எ. ஆதிநீலம் | காங்கிரசு | 21300 | 33.78 |
1971 | வி. இராசகோபால் | திமுக | 41452 | 63.85 | டி. தசரதன் | ஸ்தாபன காங்கிரசு | 23465 | 36.15 |
1977 | பி. முனுசாமி | அதிமுக | 28306 | 41.11 | சி. கண்ணப்பன் | திமுக | 26476 | 38.45 |
1980 | சி. குப்புசாமி | அதிமுக | 38501 | 50.21 | சி. கண்ணியப்பன் | திமுக | 36019 | 46.97 |
1984 | எ. ஆறுமுகம் | காங்கிரசு | 48712 | 53.29 | வி. இராசகோபால் | திமுக | 38326 | 41.93 |
1989 | வி. தனராசு | திமுக | 35264 | 43.54 | டி. எசு. கோவிந்தன் | காங்கிரசு | 21176 | 26.15 |
1991 | சி. கே. தமிழரசன் | அதிமுக | 55990 | 53.34 | வி. இராசகோபால் | திமுக | 26496 | 25.24 |
1996 | பாலா ஆனந்தன் | திமுக | 65775 | 59.97 | வி. குணசீலன் | அதிமுக | 26029 | 23.73 |
2001 | கே. முருகவேல் ராசன் | பாமக | 55773 | 49.14 | கே. லோகநாதன் | திமுக | 46902 | 41.33 |
2006 | எஸ். பி. ஜெயராமன் | திமுக | 65762 | 53 | எம். சக்கரபாணி | அதிமுக | 42974 | 35 |
2011 | வே. குணசீலன் | அதிமுக | 84529 | 52.05 | கமலக்கண்ணன் | திமுக | 72233 | 44.48 |
2016 | ச. அம்பேத்குமார் | திமுக | 80206 | 44.79 | வி. மேகநாதன் | அதிமுக | 62138 | 34.70 |
2021 | ச. அம்பேத்குமார் | திமுக[4] | 102,064 | 54.88 | முரளி சங்கர் | பாமக | 66,111 | 35.55 |
- 1951ல் இத்தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்ததால் சோமசுந்தர கவுண்டர் & இராமானுச ரெட்டியார் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
- 1957ல் இத்தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்ததால் டி. தசரதன் & எம். இராமசந்திர ரெட்டி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள். தர்ம கவுண்டர் 33185 வாக்குகள் பெற்றிருந்த போதிலும் இத்தொகுதியிலிருந்து தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் தசரதன் வெற்றிபெற்றார்.
- 1977ல் ஜனதாவின் எ. குமாரசாமி 10034 (14.57%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் சி. செங்குட்டுவன் 14522 (17.93%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் ஜி. மூர்த்தி 21649 (20.62%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் சுயேச்சை எ.வி. தேவராசு 13496 (12.30%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் என். சிவசண்முகம் 9096 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
- ↑ 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தல்: வந்தவாசி தொகுதி கண்ணோட்டம்
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
- ↑ வந்தவாசி சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா