வண்ணாரப்பேட்டை
வண்ணாரப்பேட்டை (Washermanpet) என்பது இந்திய நகரம் சென்னையின் வடபகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். துவக்கத்தில் சென்னையின் வண்ணான் துறைகள் பல இங்கு இருந்த காரணத்தால் இப்பெயர் அமைந்தது. தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னர் இதுவே துணி வியாபார மையமாக இருந்தது. இப்பகுதி நகைக் கடைகளுக்கும், தீப்பெட்டி தொழிலுக்கும் புகழ்பெற்றது.
வண்ணாரப்பேட்டை | |||
ஆள்கூறு | 13°06′53″N 80°17′14″E / 13.1148°N 80.2872°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | சென்னை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 58 மீட்டர்கள் (190 அடி) | ||
குறியீடுகள்
|
பெயர்க்காரணம்
தொகுவண்ணாரப்பேட்டை ஆங்கில வாணிபக் கழகத்தின் துணிமணிகளை வெளுப்பதற்கும், துவைப்பதற்கும், சாயம் போடுவதற்கும் பல சலவைத் தொழிலாளர்கள் (வண்ணார்கள்) பெத்தநாயக்கபேட்டைக்கு வடபுறத்தில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு வேண்டிய திறந்தவெளியும், பெருமளவு நீரும் கிடைக்காததால், கறுப்பர் பட்டினத்திற்கு (இப்போதுள்ள ஜார்ஜ் டவுன்) வடக்கில் சென்று குடியேற வேண்டியதாயிற்று. அவர்களுக்கு இந்த இடம் வசதியாக மாறிப்போய் விட்டதால், அங்கேயே நிலைத்து வாழத் தொடங்கிவிட்டனர். அவர்கள் வாழ்ந்த பகுதி இந்தப் பகுதிக்கு வண்ணாரப்பேட்டை என்று பெயர் வந்தது.
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- தடயம், அகமதுநிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி
- சென்னை மாநகரம். பழைய நினைவுகள், கானமஞ்சரி சம்பத்குமார், கண்ணபிரான் பதிப்பகம், சென்னை
வெளி இணைப்புகள்
தொகு