வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோயில்

வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் குலை வணங்கிநாதர் என்றும் அம்பிகை அழகு சடைமுடியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவரை வாலி நாதர், சித்தலிங்கேஸ்வரர், தயாநிதீசுவரர் என்றும் முன்பு அழைத்துள்ளனர்.

தேவாரம் பாடல் பெற்ற
வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கபிஸ்தலம், ஆடுதுறைப்பெருமாள் கோவில், திருவடகுரங்காடுதுறை
அமைவிடம்
ஊர்:வடகுரங்காடுதுறை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தயாநிதீஸ்வரர் (வாலி நாதர், சித்தலிங்கேஸ்வரர், குலை வணங்கி நாதர்)
தாயார்:அழகு சடைமுடியம்மை (ஜடாமகுட நாயகி)
தல விருட்சம்:தென்னை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

தல வரலாறு

தொகு
 
மூலவர் விமானம்

சிவபெருமானின் பக்தர்களான தம்பதியர் வடகுரங்காடுதுறை தலத்திற்கு வந்தனர். அவள் கருவுற்றிருந்தாள். நெடிய பயணத்தில் அவர்களுக்கு நாவறட்சி ஏற்பட்டிருந்தது. அவள் கணவன் தண்ணீரை தேடிச் சென்றான். நேரம் ஆகியதால் அவள் மேலும் சோர்வுற்றாள். எனவே கோயிலின் தென்னைமரம் வளைந்து குலையைச் சாய்த்து. இறைவன் பணியாள் போல வந்து அவளுக்கு இளநீரை சீவித் தந்தான். அவள் அயர்ந்து உறங்கினாள். தண்ணீருடன் வந்த கணவனிடம் நடந்ததை எடுத்துரைத்தாள். நம்ப மறுத்த கணவனுக்கு இறைவன் இறைவியோடு தரிசனம் தந்து உண்மையை உரைத்தார்.

இத்தலத்தில் இராமாயண வாலி இங்குவந்து தான் வலிமை பெற வேண்டினார். அதனால் இறைவன் வாலிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தல் வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறை என்றும், சுக்ரீவன் வழிபட்ட தலம் தென்குரங்காடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. அனுமனும் இத்தலத்தில் பூசை செய்துள்ளார்.

சிட்டுக்குருவியொன்று இத்தலத்திற்கு அருகேயுள்ள நீர்நிலையிலிருந்து அலகால் நீர் கொணர்ந்து இறைவனுக்கு அபிசேகம் செய்துள்ளது. அதனால் மகிழ்ந்த இறைவன் அக்குருவிக்கு முக்தியளித்தார்.

சந்நிதிகள்

தொகு

கிழக்கு பிரகாரத்தில் சனீசுவரன், கால பைரவர், சூரியன், சம்பந்தர், நாவுக்கரர் ஆகியோர் சந்நிதிகளும், தலபுராணத்தில் வருகின்ற சிவபக்தையின் சிலையும் உள்ளன. பிள்ளையார், சண்டிகேசுவரர், வள்ளி தெய்வானை முருகன், கயிலை லிங்கம், கஜலட்சுமி போன்றோரின் சன்னதிகள் உள்ளன.

அமைவிடம்

தொகு

இச்சிவாலயம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடகுரங்காடுதுறை எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் கபிஸ்தலம், ஆடுதுறைப்பெருமாள் கோவில், திருவடகுரங்காடுதுறை போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை��் தலங்களில் அமைந்துளள 49வது தலம் ஆகும்.

தேவஸ்தான கோயில்

தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு  உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2]

வழிபட்டோர்

தொகு
  • வாலி
  • அனுமன்
  • கற்பிணிப் பெண்
  • சிட்டுக்குருவி

ஆதாரங்கள்

தொகு
  1. தினகரன் ஆன்மிக மலர் 05.03.2016 பக்தரை சோதிக்காத சிவன் பக்கம் 22-23
  2. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997

வெளி இணைப்புகள்

தொகு

அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்