வகேலா வம்சம்
வகேலா வம்சம் (Vaghela dynasty) (ஆட்சி: 1243–1299) என்பது மேற்கு இந்தியாவின் தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்ப பகுதிகளை 1243 முதல் 1304 முடிய ஆண்ட அரசகுலம். சோலாங்கி ராஜபுத்திர அரச குலத்தின் ஒரு கிளைப் பிரிவே வகேலா வம்சமாகும்.
வகேலா வம்சம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1243–1299 | |||||||||||||
தலைநகரம் | தோல்கா | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | சௌரசேனி, பிராகிருதம், சமஸ்கிருதம் | ||||||||||||
சமயம் | இந்து, சமணம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
• c. 1243 - c. 1262 | வீர்தவாலா (விசாலா) | ||||||||||||
• c. 1262 - c. 1275 | அர்சுனதேவன் (விசால்தேவன்) | ||||||||||||
• c. 1275 - c. 1297 | சாரங்கதேவன் | ||||||||||||
• c. 1297-1304 | இரண்டாம் கர்ணதேவன் | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 1243 | ||||||||||||
• முடிவு | 1299 | ||||||||||||
|
வகேலா அரச குலத்தினரின் தலைநகரம் தற்கால அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோல்கா நகரமாகும்.
தில்லி சுல்தானகம் நிறுவப்பட்டப் பின் சௌராஷ்டிர தீபகற்பத்தில் இறுதி இந்து வகேலா வம்ச இராச்சியம், வகேலா வம்சத்தின் இறுதி மன்னர் இரண்டாம் கர்ணதேவன் ஆட்சியின் போது 1299-ஆம் ஆண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் சௌராஷ்டிரம் வெல்லப்பட்டு, குஜராத் பகுதிகள் அனைத்தும் தில்லி சுல்தானகத்தின் கட்டுக்குள் சென்றது. [1][2]
சாதனைகள்
தொகுவகேலா குல ஆட்சியாளர்கள் காலத்தில் அபு மலையில் தில்வாரா கோயில் மற்றும் கிர்நாரில் சமணக் கோயில்கள் எழுப்பட்டது.[3][4] மேலும் குடிநீர் தேவைக்காக, அகமதாபாத் அருகே அடாலஜ் கிராமத்தில் ��ந்து தளங்களுடன் கூடிய ஆழமான, அழகிய அடாலஜ் படிக்கிணறு அமைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
தொகுவகேலா வம்ச அரசர்கள்;
- வீர்தவாலா (விசாலன்) ( 1243 - 1262)
- அருச்சுனதேவன் (விசால்தேவன்) ( 1262 - 1275)
- சராங்கதேவன் ( 1275 - 1297)
- இரண்டாம் கர்ணதேவன் ( 1297-1304)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vaghela dynasty". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் July 24, 2013.
- ↑ Educational Britannica Educational (2010). The Geography of India: Sacred and Historic Places. The Rosen Publishing Group. pp. 269–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61530-202-4. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
- ↑ Leonard Lipschutz (2000). Century-By-Century: A Summary of World History. iUniverse. pp. 64–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4697-3415-6. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
- ↑ Kristi L. Wiley (2009). The A to Z of Jainism. Scarecrow Press. pp. 13–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-6821-2. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
ஆதார நூற்பட்டியல்
தொகு- Someśvaradeva (1883). Kirtikaumudi: A Life of Vastupâla, a Minister, of Lavanaprasâda & Vîradhavala Vaghelâs. Government Central Book Department.