லஷ்கர்-ஏ-தொய்பா

லஷ்கர்-ஏ-தொய்பா (உருது: لشكرِ طيبه, அல்லது சுத்தமான இராணுவம்) தெற்காசியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும். லாகூர், பாகிஸ்தான் அருகில் இவ்வமைப்பின் தளம் அமைந்துள்ளது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் இணைக்கவேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இக்குழுமத்தின் சில கொள்கைகள் பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் முஷரஃப்பின் அரசுக்கு எதிரானது. இதனால் அவரின் அரசுக்கு எதிராகவும் இவ்வமைப்பு சில தாக்குதல் செய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளால் இவ்வமைப்பு தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள், 2005 இலண்டன் குண்டுவெடிப்புகள், 2006 வாரணாசி குண்டுவெடிப்புகள் மற்றும் பல்வேறு வன்முறை நிகழ்வுகளில் லஷ்கர் ஏ தொய்பாவின் உட்படுத்துவது சந்தேகப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லஷ்கர்-ஏ-தொய்பா&oldid=4044951" இலிருந்து மீள்விக்கப்பட்டது